/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராஜேஸ்வரி மகளிர் கல்லுாரியில் யோகா
/
ராஜேஸ்வரி மகளிர் கல்லுாரியில் யோகா
ADDED : ஜூன் 22, 2025 02:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம் : கோட்டக்குப்பம் அருகே உள்ள பொம்மையர்பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 'ஒரே பூமி - ஒரே ஆரோக்கியம்' என்ற கருப்பொருளை மைய மாகக் கொண்டு சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
கல்லுாரி செயலாளர் சிவக்குமார் யோகாவின் முக்கியத்துவம் குறித்து பேசினார். கல்லுாரி முதல்வர் பூமாதேவி துக்கவுரை வழங்கினார். ஆங்கிலத்துறை பேராசிரியை கவிதா வரவேற்றார்.
விழாவில் பேராசிரியைகள், மாணவிகள் யோகா செய்தனர். உடல், மனநலம் காக்க நாள்தோறும் யோகா பயிற்சி மேற்கொள்ள உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கல்லுாரியின் விளையாட்டு இயக்குனர் மகேஸ்வரி செய்திருந்தார்.