/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
யோகா பண்பு பயிற்சி முகாம் சங்கரதாஸ் பள்ளியில் துவக்கம்
/
யோகா பண்பு பயிற்சி முகாம் சங்கரதாஸ் பள்ளியில் துவக்கம்
யோகா பண்பு பயிற்சி முகாம் சங்கரதாஸ் பள்ளியில் துவக்கம்
யோகா பண்பு பயிற்சி முகாம் சங்கரதாஸ் பள்ளியில் துவக்கம்
ADDED : மே 02, 2025 04:51 AM

புதுச்சேரி: பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச யோகா பண்பு ஒரு வார பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
புதுச்சேரி, சிவராம்ஜி யோகா மையம் மற்றும் சமர்ப்பணம் சேவை மையமும் இணைந்து ஆண்டு தோறும், கோடை விடுமுறையில் (8 முதல் 15 வயதிற்கு உட்பட்ட) மாணவ, மாணவிகளுக்கு) யோகா பண்பு பயிற்சி முகாம் நடத்தி வருகிறது.
அதன்படி 4ம் ஆண்டிற்கான ஒருவார கால பயிற்சி முகாம் லாஸ்பேட்டை, இ.சி.ஆரில் உள்ள ஸ்ரீசங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நேற்று தொடங்கியது.
துவக்க விழாவிற்கு சிவராம்ஜி யோகா மைய தலைவர் பால்ராஜா வரவேற்றார். பொதுச் செயலாளர் சிற்றரசு முகாமின் நோக்கத்தை விளக்கினார்.
அமைச்சர் சாய் சரவணன்குமார், ராமலிங்கம் எம்.எல்.ஏ., சின்மயா பொறுப்பாளர் மாதாஜி, பாஸ்கரன், ஆசிர்வாத் கட்டுமான நிறுவனத் தலைவர் ரமேஷ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி, முகாமை துவக்கி வைத்து பேசினர்.
விஷ்வ ஹிந்து பரிஷத், வட தமிழக மாநில அமைப்பு செயலாளர் ராமன்ஜி சிறப்புரையாற்றினார். சிவராம்ஜி யோகா மைய பொருளாளர் மனோகரன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை ஆலோசனை குழு உறுப்பினர் உஷா ரவி தொகுத்து வழங்கினார்.
முகாமில் மொத்தம் 150 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இவர்களுக்கு ஒரு வாரத்திற்கு தினமும் காலையில் யோகா, ப்ராணாயாமம், களரி, சிலம்பம் பயிற்சி அளிக்கப்படுகிறது. மதியம் உணவு இடைவேளைக்கு பின், மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப பரதநாட்டியம், பாட்டு, விளையாட்டு, வினாடி-வினா, கதை மற்றும் ஓவியம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஒரு வாரம் நடைபெறும் இப்பயிற்சி முகாமின் நிறைவு விழா வரும் 7 ம் தேதி மாலை 3:00 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடக்கிறது.

