/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது ரூ.6.80 லட்சம் மதிப்புள்ள நகை பறிமுதல்

ADDED : பிப் 02, 2025 05:01 AM
காரைக்கால், : காரைக்காலில் வீட்டை உடைத்து, நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி பூவம் நண்டலாறு பகுதியில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த வாலிபரை சந்தோகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
அவர், மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார், மேலையூர் ராசையன்குளம் பகுதியை சேர்ந்த சிவானந்தம், 34.
இவர், கடந்த டிச.,9ம் தேதி கோட்டுச்சேரி பகுதியை சேர்ந்த செல்வி என்பவர் வீடு மற்றும் திருவேட்டக்குடி வாசுகி என்பவர் வீட்டில் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது.
அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 6.80 லட்சம் மதிப்புள்ள நகை, வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.