/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடைகளை உடைத்து ரூ.73 ஆயிரம் திருடிய வாலிபர் கைது
/
கடைகளை உடைத்து ரூ.73 ஆயிரம் திருடிய வாலிபர் கைது
ADDED : ஆக 22, 2025 10:24 PM

திருபுவனை : திருபுவனை அருகே இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து ரூ.73 ஆயிரம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருபுவனையை சேர்ந்தவர் நாகராஜ், 47; திருவண்டார்கோவில் மேம்பாலம் சர்வீஸ் சாலையில் தார்பாய் மொத்த வியாபார கடை நடத்தி வந்தார். கடந்த 14ம் தேதி காலை நாகராஜன் கடையை திறக்க சென்றபோது கடையின் முன்பக்க ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது டேபிள் டிராயரில் இருந்த ரூ.63 ஆயிரம் பணம் திருடு போய் இருந்தது.
அதேபோல் மதகடிப்பட்டு மேம்பாலம் நான்குமுனை சந்திப்பு, மடுகரை சாலையில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் திருடு போய் இருந்தது.
இது குறித்த புகாரின்பேரில் நெட்டப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
அப்பகுதிகளில் இருந்த சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் 3 வாலிபர்கள் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இரண்டு கடைகளை உடைத்து திருடிய லாஸ்பேட்டை, சாமிபிள்ளைத்தோட்டம், லெனின் நகரை சேர்ந்த சுப்ரமணியன் மகன் ஆர்கேஷ் (எ) குஸ்கா சுனில் 19; என்பவரை கைது செய்தனர். விசாரணையில் லாஸ்பேட்டையை சேர்ந்த அவரது நண்பர்கள் சரத் மற்றும் சஞ்சய் ஆகியோருடன் சேர்ந்து திருடியது தெரியவந்தது. குஸ்கா சுனிலை புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.