/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.ஜி.ஆர்., சிலையை உடைத்த வாலிபர் கைது
/
எம்.ஜி.ஆர்., சிலையை உடைத்த வாலிபர் கைது
ADDED : அக் 06, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வில்லியனுார் அடுத்த சிவராந்தகம் பேட் பகுதியில் எம்.ஜி.ஆர். சிலையை வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இந்த சிலையின் வலது கை உடைந்து காணப்பட்டது.
இதுகுறித்து அ.தி.மு.க., மங்கலம் தொகுதி செயலாளர் தர்மலிங்கம் மங்கலம் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப் பதிந்து விசாரித்தார். எம்.ஜி.ஆர்., சிலையை உடைத்தது அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மகன் சாரதி, 19, என, தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.