/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.எல்.ஏ., அதிகாரிகளை மிரட்டிய வாலிபர் கைது
/
எம்.எல்.ஏ., அதிகாரிகளை மிரட்டிய வாலிபர் கைது
ADDED : அக் 02, 2024 02:55 AM
புதுச்சேரி : கருவடிக்குப்பம், மேஜர் சரவணன் நகர், ஓடை வீதியில் பொதுப்பணித்துறை சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைத்தல், குடிநீர் தரம் பரிசோதனை செய்வதற்காக கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.
அப்போது, கருவடிக்குப்பம் மேஜர் சரவணன் நகர், தமிழ்ஒளி வீதியைச் சேர்ந்த கதிர், ராஜா ஆகியோர் எம்.எல்.ஏ., மற்றும் அதிகாரிகளை ஆபாசமாக திட்டினர்.
தட்டி கேட்ட அதே பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., ஆதரவாளர் ராஜசேகரன் உள்ளிட்டோரை கத்தியை காட்டி மிரட்டியதாக லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.
இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து, கதிரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பியோடிய ராஜாவை தேடி வருகின்றனர்.

