/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபர் 'போக்சோ' வில் கைது
/
சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபர் 'போக்சோ' வில் கைது
சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபர் 'போக்சோ' வில் கைது
சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபர் 'போக்சோ' வில் கைது
ADDED : மே 27, 2025 07:26 AM
நெட்டப்பாக்கம் : பெண்ணை பாலியல் பலத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ வழக்கில்கைது செய்தனர்.
நெட்டப்பாக்கம் அடுத்த கரியமாணிக்கம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் சரண்ராஜ் 20, பி ளஸ் டூ முடித்துவிட்டு வீட்டிலிருந்து வருகிறார்.
இவர் நெட்டப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 16 வயது பெண்ணை ஒரு தலைப் பட்சமாக காதலித்து வந்துள்ளார்.
மேலும் அந்தப் பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதற்கு அப்பெண் மறுக்கவே நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
நடந்த சம்பவம் குறித்து அப்பெண் பெற்றோர்களிடம் தெரிவித்தார்.
பெண்ணின் பெற்றோர் புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் குப்புசாமி வழக்குப்பதிந்து சரண்ராஜ் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.