/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின் கம்பத்தில் பைக் மோதி வாலிபர் பலி
/
மின் கம்பத்தில் பைக் மோதி வாலிபர் பலி
ADDED : ஆக 20, 2025 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : சாலையோர மின் கம்பத்தில் பைக் மோதி வாலிபர் இறந்தார்.
உறுவையாறு நத்தமேடு 3வது தெருவைச் சேர்ந்தவர் சிவபாலன், 34; தனியார் கம்பெனி ஒப்பந்த ஊழியர். இவர், கடந்த 9ம் தேதி மங்களம் சென்று வீட்டிற்கு பைக்கில் (பி.ஒய்.01.பி.டி.7844) வந்து கொண்டிருந்தார்.
உறுவையாறு மெயின் ரோட்டில் வந்தபோது, நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் பைக் மோதி கீழே விழுந்து காயமடைந்தார். புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இறந்தார்.
விபத்து குறித்து வில்லியனுார் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.