UPDATED : நவ 04, 2026 12:12 PM
ADDED : நவ 04, 2026 12:07 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வாலிபரை தாக்கி மொபைல்போன் பறித்து சென்ற நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
பண்ரூட்டி தாலுாகா புலவனுார் பகுதியை சேர்ந்தவர் பிரபு,35; இவர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில்,புதுச்சேரி செஞ்சி சாலை வருமானவரிதுறை அலுவலகம் அருகில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த மூன்று வாலிபர்கள் திடீரென பிரபுவை தாக்கி அவரிடம் இருந்து மொபைல்போனை பறித்து சென்றனர்.
புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
