sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

ஆசிய பாட்மின்டன்: காலிறுதியில் இந்தியா

/

ஆசிய பாட்மின்டன்: காலிறுதியில் இந்தியா

ஆசிய பாட்மின்டன்: காலிறுதியில் இந்தியா

ஆசிய பாட்மின்டன்: காலிறுதியில் இந்தியா


ADDED : பிப் 12, 2025 10:22 PM

Google News

ADDED : பிப் 12, 2025 10:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிங்டாவோ: ஆசிய பாட்மின்டன் காலிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது. லீக் போட்டியில் 5-0 என மக்காவ் அணியை வீழ்த்தியது.

சீனாவில், ஆசிய பாட்மின்டன் (கலப்பு அணி) சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள், 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 'டி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, மக்காவ் அணிகள் மோதின.

கலப்பு இரட்டையரில் இந்தியாவின் சதிஷ் குமார் கருணாகரன், ஆத்யா ஜோடி 21-10, 21-9 என மக்காவின் லியோங், வெங் சி ஜோடியை வீழ்த்தியது. ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் லக்சயா சென் 21-16, 21-12 என மக்காவ் வீரர் பாங் போங் புய்யை வென்றார். பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் மாளவிகா 21-15, 21-9 என மக்காவின் ஹாவோ வை சானை தோற்கடித்தார்.

ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் அர்ஜுன், சிராக் ஷெட்டி ஜோடி 21-15, 21-9 என மக்காவின் புய் சி சோன், வோங் கோக் வெங் ஜோடியை வென்றது. பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் திரிசா, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-10, 21-5 என மக்காவின் வெங் சி, புய் சி வா ஜோடியை வீழ்த்தியது.

முடிவில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கான இடத்தை உறுதி செய்தது. இன்று நடக்கும் போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதுகின்றன. இதில் வென்றால் 'டி' பிரிவில் முதலிடம் பிடிக்கலாம்.






      Dinamalar
      Follow us