உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : நவ 14, 2026 12:00 AM
ADDED : நவ 13, 2026 09:42 PM

அ நிறம் | அளவு
குமமோடோ: ஜப்பானில், ‘சூப்பர் 500’ அந்தஸ்து பெற்ற ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், உலகின் ‘நம்பர்–13’ இந்தியாவின் லக்சயா சென், 17 வது இடத்தில் உள்ள ஜப்பானின் யுஷி டனகாவை எதிர்கொண்டார்.
முதல் செட்டை 21–16 என வென்ற லக்சயா, அடுத்த செட்டை 21–15 என கைப்பற்றினார். 40 நிமிடம் நடந்த போட்டி முடிவில் லக்சயா, 21–16, 21–15 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் உலகின் ‘நம்பர்–31’ இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஜப்பானின் கோகி வடனபே (‘நம்பர்–15’) மோதினர். 41 நிமிடம் நடந்த போட்டி முடிவில் ஸ்ரீகாந்த், 22–24, 21–15 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
