உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : நவ 01, 2026 03:06 PM

அ நிறம் | அளவு
சார்புருக்கன்: ஹைலோ ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு, இந்தியாவின் சிந்து பைனலுக்கு முன்னேறினார்.
ஜெர்மனியில், ‘சூப்பர் 500’ அந்தஸ்து பெற்ற ஹைலோ ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சிந்து, சக வீராங்கனை அன்மோல் கார்ப்பை எதிர்கொண்டார். முதல் செட்டில் அன்மோல், 10–12 என சிந்துவை நெருங்கினார். பின் சிந்து 21–13 என வசப்படுத்தினார்.
இரண்டாவது செட்டில் சிந்து 13–15 என பின்தங்கினார். அடுத்து சுதாரித்த சிந்து 21–16 என வென்றார். 38 நிமிடம் நடந்த போட்டி முடிவில் சிந்து, 21–13, 21–16 என நேர் செட்டில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தார்.
இதில் இன்று, டென்மார்க்கின் லின் ஹோஜ்மார்க்கை சந்திக்கிறார்.
