/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
பாட்மின்டன்: சுமீத் ரெட்டி ஓய்வு
/
பாட்மின்டன்: சுமீத் ரெட்டி ஓய்வு
ADDED : மார் 24, 2025 10:48 PM

புதுடில்லி: இந்தியாவின் சுமீத் ரெட்டி, பாட்மின்டன் போட்டியில் இருந்து ஓய்வு.
இந்திய பாட்மின்டன் வீரர் சுமீத் ரெட்டி 33. ஐதராபாத்தை சேர்ந்த இவர், இரட்டையர் பிரிவு போட்டிகளில் பங்கேற்றார். தனது 10வது வயதில் பாட்மின்டன் விளையாட துவங்கிய சுமீத், 2007ல் முதன்முறையாக சர்வதேச போட்டியில் பங்கேற்றார். சகவீரர் மானு அட்ரியுடன் இணைந்து நிறைய போட்டிகளில் பங்கேற்றார். இந்த ஜோடி 2016ல் நடந்த தெற்காசிய விளையாட்டில் தங்கம் வென்றது. ஆசிய சாம்பியன்ஷிப் (2016, வெண்கலம்), காமன்வெல்த் விளையாட்டில் (2022, வெள்ளி) பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். இரட்டையரில், 2 'கிராண்ட் ப்ரீ' பட்டம் (2015, 2016) பட்டம் வென்ற சுமீத், சர்வதேச சேலஞ்ச் தொடரில் 10 முறை கோப்பை வென்றிருந்தார். கலப்பு இரட்டையரில் அஷ்வினியுடன் இணைந்து சையது மோடி தொடரில் (2017) பைனல் வரை சென்றார்.
கடந்த 2021ல் ஐதராபாத்தில் 'சிக்கி சுமீத் பாட்மின்டன் அகாடமி' துவக்கினார். இந்நிலையில் நேற்று, பாட்மின்டன் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார் சுமீத். இனி, பயிற்சியாளர் பணியில் கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்தார்.
சுமீத் ரெட்டி கூறுகையில், ''பாட்மின்டன் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறேன். பயிற்சியாளர் பணியை துவக்க உள்ளேன். உலக பாட்மின்டனில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, சிறந்த நட்சத்திரங்களை உருவாக்குவேன்,'' என்றார்.