/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
பாட்மின்டன்: மாளவிகா ஏமாற்றம்
/
பாட்மின்டன்: மாளவிகா ஏமாற்றம்
ADDED : ஆக 20, 2024 11:30 PM

யோகோஹாமா: ஜப்பான் ஓபன் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் மாளவிகா தோல்வியடைந்தார்.
ஜப்பானில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மாளவிகா, உக்ரைனின் போலினாவை எதிர்கொண்டார்.
முதல் செட்டை மாளவிகா 21-23 என்ற கணக்கில் நழுவவிட்டார். தொடர்ந்து இரண்டாவது செட்டில் போராடிய போதும் 19-21 என கோட்டை விட்டார். முடிவில் மாளவிகா 21-23, 19-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார். மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா, இத்தொடரின் 'நம்பர்-1' வீராங்கனை, சீன தைபேவின் தய் ஜு இங்கிடம் 16-21, 12-21 என்ற கணக்கில் வீழ்ந்தார். இந்திய வீராங்கனை ஆகர்ஷி, 13-21, 12-21 என தென் கொரியாவின் கிம் கா யுனிடம் தோல்வியடைந்தார்.
கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சதிஷ் குமார், ஆத்யா ஜோடி, இந்தோனேஷியாவின் ரேஹன் நவுபால், லிசா அயு ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 10-21, 18-21 என்ற நேர் செட்டில் எளிதாக வீழ்ந்தது.