/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
செய்னா நேவல் ஓய்வு * பாட்மின்டன் அரங்கில் இருந்து...
/
செய்னா நேவல் ஓய்வு * பாட்மின்டன் அரங்கில் இருந்து...
செய்னா நேவல் ஓய்வு * பாட்மின்டன் அரங்கில் இருந்து...
செய்னா நேவல் ஓய்வு * பாட்மின்டன் அரங்கில் இருந்து...
ADDED : அக் 14, 2025 10:48 PM

உடுப்பி: சர்வதேச பாட்மின்டனில் இருந்து ஓய்வு பெற்றார் செய்னா நேவல்.
இந்திய பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல் 35. கடந்த 2012, லண்டன் ஒலிம்பிக் ஒற்றையரில் வெண்கலம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக் பாட்மின்டனில் பதக்கம் வென்ற முதல் இந்தியரானார். அடுத்து உலக சாம்பியன்ஷிப் அரங்கில் 2015 (வெள்ளி), 2017ல் (வெண்கலம்) பதக்கம் வென்றார்.
கடந்த 2015ல் வெளியான உலக பாட்மின்டன் தரவரிசையில் 'நம்பர்-1' இடம் பிடித்தார். காமன்வெல்த் விளையாட்டில் 2 முறை (2010, 2018) தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார். அர்ஜுனா (2009), பத்ம ஸ்ரீ (2010), கேல் ரத்னா (2009-10), பத்ம பூஷன் (2016) விருது பெற்றுள்ளார்.
தற்போது தனது 25 ஆண்டு பாட்மின்டன் பயணத்தில் இருந்து ஓய்வு பெறுகிறார் செய்னா. இதுகுறித்து செய்னா கூறுகையில்,''பாட்மின்டன் மீதான எனது ஆர்வம் தொடர்கிறது. எனினும் உடல்நிலை ஒத்துழைக்க மறுக்கிறது. பாட்மின்டனில் இருந்து விலகுறேன். எதிர்காலத்தில் பயிற்சியாளராக வருவது குறித்து முடிவெடுக்கவில்லை. விளையாடுவதை விட இது கடினமானது. தினமும் 10 முதல் 15 மணி நேரம் மைதானத்தில் நின்று, மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்,'' என்றார்.