ADDED : அக் 09, 2025 10:53 PM

வன்ட்டா: பின்லாந்தில் ஆர்டிக் ஓபன் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. கலப்பு இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் தனிஷா, துருவ் கபிலா ஜோடி, உக்ரைனின் எவ்ஹெனியா, ஒலக்சி ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 23-25 என போராடி தோற்றது இந்திய ஜோடி.
அடுத்த செட்டை 21-14 என எளிதாக கைப்பற்றி பதிலடி தந்தது. மூன்றாவது, கடைசி செட்டை இந்திய ஜோடி 21-17 என கைப்பற்றியது. முடிவில் 23-25, 21-14, 21-17 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் 69 வது இடத்திலுள்ள இந்தியாவின் தான்யா, உலகின் 'நம்பர்-9' ஆக உள்ள தாய்லாந்தின் ரட்சனாக்கை சந்தித்தார். இதில் தான்யா 21-9, 21-8 என எளிதாக தோல்வியடைந்தார்.
ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் தருண், ஜப்பானின் வடனபேவை சந்தித்தார். இதில் தருண் 20-22, 12-21 என தோல்வியடைந்தார்.