/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
கொரிய பாட்மின்டன்: இந்தியா ஏமாற்றம்
/
கொரிய பாட்மின்டன்: இந்தியா ஏமாற்றம்
ADDED : செப் 24, 2025 10:18 PM

சுவோன்: கொரிய ஓபன் பாட்மின்டனில் ஆயுஷ் ஷெட்டி, அனுபமா உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் ஏமாற்றினர்.
தென் கொரியாவில், மாஸ்டர்ஸ் 'சூப்பர் 350' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரனாய், இந்தோனேஷியாவின் சிகோ அவுரா டிவி வார்டோயோ மோதினர். முதல் செட்டில் 8-16 என பின்தங்கி இருந்த போது, வலது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் பிரனாய் பாதியில் விலகினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 18-21, 18-21 என சீனதைபேயின் சு லி யாங்கிடம் தோல்வியடைந்தார். இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் 14-21, 22-20 என சிங்கப்பூரின் லோ கீன் யேவிடம் வீழ்ந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அனுபமா 16-21, 15-21 என இந்தோனேஷியாவின் புத்ரி வார்டானியிடம் தோல்வியடைந்தார். கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் மோகித், லக்சிதா ஜோடி 7-21, 14-21 என ஜப்பானின் யுச்சி ஷிமோகாமி, சயாகா ஹோபரா ஜோடியிடம் வீழ்ந்தது.
இத்தொடரில் இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது.