/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
வரலாறு படைத்தது இந்தியா: உலக ஜூனியர் பாட்மின்டனில்
/
வரலாறு படைத்தது இந்தியா: உலக ஜூனியர் பாட்மின்டனில்
வரலாறு படைத்தது இந்தியா: உலக ஜூனியர் பாட்மின்டனில்
வரலாறு படைத்தது இந்தியா: உலக ஜூனியர் பாட்மின்டனில்
ADDED : அக் 09, 2025 10:10 PM

கவுகாத்தி: உலக ஜூனியர் பாட்மின்டன் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா, முதல் பதக்கத்தை உறுதி செய்து புதிய வரலாறு படைத்தது. காலிறுதியில் 2-1 என, தென் கொரியாவை வீழ்த்தியது.
அசாமின் கவுகாத்தியில், கலப்பு அணிகளுக்கான உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. மொத்தம் 36 அணிகள், 8 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 'எச்' பிரிவில் இடம் பெற்ற இந்தியா அணி, நேபாளம், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.
காலிறுதியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. முதல் செட்டை 44-45 என இழந்த இந்தியா, அடுத்த இரு செட்களை 45-30, 45-33 எனக் கைப்பற்றியது. முடிவில் உன்னதி ஹூடா, ரேஷிகா, ரவுனக் சவுகான், பார்கவ், விஸ்வா உள்ளிட்டோர் இடம் பெற்ற இந்திய அணி 2-1 (44-45, 45-30, 45-33) என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இன்று நடக்கும் அரையிறுதியில் இந்தியா, இந்தோனேஷியா அணிகள் மோதுகின்றன.
இதன்மூலம் கலப்பு அணிகளுக்கான உலக ஜூனியர் பாட்மின்டன் வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் உறுதியானது. ஏற்கனவே தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு 11 பதக்கம் கிடைத்துள்ளன.