/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
திரீஷா-காயத்ரி ஜோடி சாதனை * பாட்மின்டன் தரவரிசையில்...
/
திரீஷா-காயத்ரி ஜோடி சாதனை * பாட்மின்டன் தரவரிசையில்...
திரீஷா-காயத்ரி ஜோடி சாதனை * பாட்மின்டன் தரவரிசையில்...
திரீஷா-காயத்ரி ஜோடி சாதனை * பாட்மின்டன் தரவரிசையில்...
ADDED : ஜன 14, 2025 10:02 PM

புதுடில்லி: பாட்மின்டன் தரவரிசையில் 9வது இடத்துக்கு முன்னேறி, திரீஷா-காயத்ரி ஜோடி சாதனை படைத்தது.
சர்வதேச பாட்மின்டன் கூட்டமைப்பு சார்பில் புதிய தரவரிசை பட்டியல் வெளியானது. பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரீஷா-காயத்ரி ஜோடி, 2 இடம் முன்னேறி, முதன் முறையாக 9 வது இடம் பிடித்தது. பாட்மின்டன் தரவரிசையில் இது, இந்திய பெண்கள் ஜோடியின் சாதனை ஆனது.
முன்னதாக 2015ல் அஷ்வினி, ஜுவாலா ஜோடி 10 வது இடம் பிடித்ததே அதிகமாக இருந்தது.
கடந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெறாத போதும், திரீஷா-காயத்ரி ஜோடி, மக்காவ் ஓபன், கனடா ஓபன் தொடரில் சிறப்பாக செயல்பட்டது. இந்தியாவில் நடந்த சையது மோடி தொடரில் கோப்பை வென்ற இந்த ஜோடி, கடந்த வாரம் மலேசிய ஓபனில் காலிறுதிக்கு சென்றது. இதனால் 'டாப்-10' பட்டியலில் நுழைந்துள்ளது.
சிந்து பின்னடைவு
திருமணம் காரணமாக மலேசிய தொடரில் பங்கேற்காத இந்தியாவின் சிந்து, ஒற்றையர் தரவரிசையில் 2 இடம் பின்தங்கி, 16வதாக உள்ளார். ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, 9வது இடத்தில் தொடர்கிறது.

