பாட்மின்டன்: சிந்து 'நம்பர்-8' * உலக தரவரிசையில் முன்னேற்றம்
பாட்மின்டன்: சிந்து 'நம்பர்-8' * உலக தரவரிசையில் முன்னேற்றம்
ADDED : ஜூலை 21, 2026 11:09 PM

புதுடில்லி: உலக பாட்மின்டன் தரவரிசையில் 8 வது இடத்துக்கு முன்னேறினார் இந்தியாவின் சிந்து.
உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) சார்பில், பாட்மின்டன் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. சமீபத்தில் ஜப்பான் ஓபன் தொடரில் இந்தியாவின் சிந்து கோப்பை வென்றிருந்தார். இதையடுத்து, 11,000 புள்ளிகள் கூடுதலாக பெற்றார்.
மொத்தம் 67,601 புள்ளியுடன் 2 இடம் முன்னேறிய சிந்து, தாய்லாந்தின் பர்ன்பாவே (66,727), ஜப்பானின் மியாசகியை (63,646) பின் தள்ளி, 'நம்பர்-8' வது இடம் பிடித்தார்.
மூன்று ஆண்டு
கடந்த 2023, ஜன.ல் வெளியான தரவரிசையில் சிந்து, 8 வது இடத்தில் இருந்தார். தற்போது மூன்று ஆண்டுக்குப் பின், மீண்டும் 8வது இடம் பிடித்துள்ளார் சிந்து. அடுத்து டில்லியில் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் (ஆக. 17-26) வரவுள்ள நிலையில், இந்த தரவரிசை முன்னேற்றம், சிந்துவுக்கு சாதகமாக அமையலாம்.
ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் லக்சயா சென், 14வது இடத்தில் தொடர்கிறார். காயம் காரணமாக ஜப்பான் ஓபன் தொடரில் பாதியில் விலகிய இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, ஆண்கள் இரட்டையர் தரவரிசையில் 4வது இடத்தில் நீடிக்கிறது.
