/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
பிரெஞ்ச் ஓபன்: காலிறுதியில் சிந்து
/
பிரெஞ்ச் ஓபன்: காலிறுதியில் சிந்து
ADDED : மார் 07, 2024 10:22 PM

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் சிந்து முன்னேறினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 'சூப்பர் 750' அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் சிந்து, அமெரிக்காவின் பெய்வென் ஜாங் மோதினர். முதல் செட்டை 13-21 என இழந்த சிந்து, பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 21-10 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் அசத்திய இவர் 21-14 என தன்வசப்படுத்தினார். மொத்தம் 55 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சிந்து 13-21, 21-10, 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சீனாவின் குவாங் சூ லுா மோதினர். இதில் ஏமாற்றிய ஸ்ரீகாந்த் 21-19, 12-21, 20-22 என தோல்வியடைந்து வெளியேறினார்.
பெண்கள் இரட்டையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் திரீசா, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-18, 21-13 என ஜப்பானின் யூகி புகுஷிமா, சயாகா ஹிரோடா ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

