/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
காயத்ரி-திரீசா ஜோடி அபாரம்: மக்காவ் ஓபன் பாட்மின்டனில்
/
காயத்ரி-திரீசா ஜோடி அபாரம்: மக்காவ் ஓபன் பாட்மின்டனில்
காயத்ரி-திரீசா ஜோடி அபாரம்: மக்காவ் ஓபன் பாட்மின்டனில்
காயத்ரி-திரீசா ஜோடி அபாரம்: மக்காவ் ஓபன் பாட்மின்டனில்
ADDED : செப் 27, 2024 10:01 PM

மக்காவ்: மக்காவ் ஓபன் பாட்மின்டன் அரையிறுதிக்கு இந்தியாவின் காயத்ரி கோபிசந்த், திரீசா ஜோடி முன்னேறியது.
மக்காவ் ஓபன் 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் திரீசா, காயத்ரி கோபிசந்த் ஜோடி, சீனதைபேயின் யின்-ஹுய் ஹசு, ஜி யுன் லின் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 21-12 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 21-17 என வென்றது.
மொத்தம் 39 நிமிடம் நீடித்த போட்டியில் காயத்ரி, திரீசா ஜோடி 21-12, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் கா லாங் அங்கஸ் மோதினர். இதில் ஏமாற்றிய ஸ்ரீகாந்த் 16-21, 12-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.