/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
இந்திய ஜோடி வெற்றி * ஹாங்காங் பாட்மின்டனில்...
/
இந்திய ஜோடி வெற்றி * ஹாங்காங் பாட்மின்டனில்...
ADDED : செப் 10, 2024 11:08 PM

கோவ்லுான்: ஹாங்காங் பாட்மின்டன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் காயத்ரி, திரீசா ஜோடி வெற்றி பெற்றது.
ஹாங்காங்கில்
சர்வதேச ஓபன் பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. பெண்களுக்கான
இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் காயத்ரி, திரீசா ஜோடி,
உக்ரைனின் போலினா, எவ்ஹெனியா ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை இந்திய
ஜோடி 21-14 என கைப்பற்றியது. தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட இந்திய ஜோடி
அடுத்த செட்டையும் 21-13 என வசப்படுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 21-14,
21-13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய இண்டாவது
சுற்றுக்கு முன்னேறியது.
பெண்கள் இரட்டையர் மற்றொரு முதல் சுற்றில்
இந்தியாவின் ருதுபர்ணா, ஸ்வேதாபர்ணா ஜோடி 11-21, 8-21 என சீன தைபேவின் பெய்
ஷன், ஹங் டிசு ஜோடியிடம் தோல்வியடைந்தது.
ஆண்கள் ஒற்றையர்
தகுதிச்சுற்று முதல் போட்டியில் இந்திய வீரர் மானவ் சவுத்ரி, 21-14, 21-19
என உக்ரைனின் ஒலக்சியை வீழ்த்தினார். அடுத்த போட்டியில் சீனாவின் சன்
சக்கிடம் 6-21, 10-21 என தோற்று, பிரதான சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை
இழந்தார்.