sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

இந்தியாவை வீழ்த்தியது ஜப்பான்: ஆசிய பாட்மின்டன் காலிறுதியில்

/

இந்தியாவை வீழ்த்தியது ஜப்பான்: ஆசிய பாட்மின்டன் காலிறுதியில்

இந்தியாவை வீழ்த்தியது ஜப்பான்: ஆசிய பாட்மின்டன் காலிறுதியில்

இந்தியாவை வீழ்த்தியது ஜப்பான்: ஆசிய பாட்மின்டன் காலிறுதியில்


ADDED : பிப் 14, 2025 10:29 PM

Google News

ADDED : பிப் 14, 2025 10:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிங்டாவோ: ஆசிய பாட்மின்டன் காலிறுதியில் ஏமாற்றிய இந்தியா 0-3 என, ஜப்பானிடம் தோல்வியடைந்தது.

சீனாவில், ஆசிய பாட்மின்டன் (கலப்பு அணி) சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின. கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி 13-21, 21-17, 13-21 என ஜப்பானின் ஹிரோகி மிடோரிகாவா, நட்சு சாய்டோ ஜோடியிடம் வீழ்ந்தது.

பெண்கள் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத் 12-21, 19-21 என ஜப்பானின் டொமோகா மியாசாகியிடம் தோல்வியடைந்தார். ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் பிரனாய் 14-21, 21-15, 12-21 என ஜப்பானின் கென்டா நிஷிமோடோவிடம் வீழ்ந்தார்.

முடிவில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. கடந்த முறை (2023, துபாய்) வெண்கலம் வென்று வரலாறு படைத்த இந்தியா, இம்முறை காலிறுதியோடு திரும்பி ஏமாற்றியது. சீனியர் வீராங்கனை சிந்து, தொடையின் பின்பகுதி காயத்தால் விலகியது பாதிப்பை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us