/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
மக்காவ் பாட்மின்டன்: காலிறுதியில் ஸ்ரீகாந்த்
/
மக்காவ் பாட்மின்டன்: காலிறுதியில் ஸ்ரீகாந்த்
ADDED : செப் 26, 2024 09:58 PM

மக்காவ்: மக்காவ் ஓபன் பாட்மின்டன் காலிறுதிக்கு இந்தியாவின் ஸ்ரீகாந்த் முன்னேறினார்.
மக்காவ் ஓபன் 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஆயுஷ் ஷெட்டி மோதினர். மொத்தம் 37 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஸ்ரீகாந்த் 21-13, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
பெண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த், திரீசா ஜோடி 22-20, 21-11 என சீனதைபேயின் சி-சுன் லின், சுன் சன் டெங் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் தஸ்னிம் மிர் 17-21, 21-13, 10-21 என ஜப்பானின் டோமோகா மியாசகியிடம் தோல்வியடைந்தார்.
கலப்பு இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சுமீத், சிக்கி ரெட்டி ஜோடி 17-21, 14-21 என மலேசியாவின் டியன் சி வோங், சீவ் சியன் லிம் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

