/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
சாத்விக்-சிராக் ஜோடி சாதனை * தொடரும் 'நம்பர்-1' இடம்
/
சாத்விக்-சிராக் ஜோடி சாதனை * தொடரும் 'நம்பர்-1' இடம்
சாத்விக்-சிராக் ஜோடி சாதனை * தொடரும் 'நம்பர்-1' இடம்
சாத்விக்-சிராக் ஜோடி சாதனை * தொடரும் 'நம்பர்-1' இடம்
ADDED : மார் 27, 2024 10:23 PM

புதுடில்லி: பாட்மின்டன் தரவரிசையில் சாத்விக்-சிராக் ஜோடி தொடர்ந்து 10 வாரங்களாக 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறது.
இந்தியா பாட்மின்டன் இரட்டையர் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி. 2023ல் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றதை அடுத்து, கடந்த அக்டோபர் மாதம் பாட்மின்டன் உலகத் தரவரிசையில் 'நம்பர்-1' இடம் பெற்ற முதல் இந்திய ஜோடி ஆனது. ஆனால் அடுத்த மூன்று வாரத்தில், முதலிடத்தை இழந்தது.
சமீபத்தில் மலேசிய ஓபன், இந்தியன் ஓபன், பிரெஞ்ச் ஓபன் உட்பட தொடர்ந்து நான்கு தொடரின் பைனலுக்கு முன்னேறியது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் சாத்விக்-சிராக் ஜோடி மீண்டும் முதலிடம் பிடித்தது. தற்போது 1,02,303 புள்ளியுடன் தொடர்ந்து 10 வாரங்களாக முதலிடத்தில் நீடிக்கிறது. தென் கொரியாவின் மின் ஹியுக், சியோ சியோங் ஜோடி (97,261) இரண்டாவது இடத்தில் உள்ளது.
இது சாதனை
இதற்கு முன் சர்வதேச பாட்மின்டன் தரவரிசையில் 'நம்பர்-1' இடம் பிடித்த முதல் இந்தியர் ஆனார் செய்னா நேவல். இவர் 2015, ஆக. 20ல் முதல் அக்., 21 வரை என, 9 வாரம் முதலிடத்தில் இருந்தார். ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 2017, ஏப். 12ல் ஒரு வாரம் மட்டும் முதல்வனாக இருந்தார். இந்த வரிசையில் சாத்விக்-சிராக் ஜோடி தொடர்ந்து 10 வாரங்களாக 'நம்பர்-1' இடத்தில் நீடித்து சாதனை படைத்தது.

