/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
சதிஷ் குமார் 'சாம்பியன்': மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்
/
சதிஷ் குமார் 'சாம்பியன்': மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்
ADDED : டிச 08, 2024 09:44 PM

கவுகாத்தி: கவுகாத்தி மாஸ்டர்ஸ் பாட்மின்டன் ஒற்றையரில் இந்தியாவின் சதிஷ் குமார் சாம்பியன் பட்டம் வென்றார்.
அசாமின் கவுகாத்தியில், 'சூப்பர் 100' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சதிஷ் குமார் கருணாகரன், சீனாவின் ஜுவான் சென் ஜு மோதினர். அபாரமாக ஆடிய தமிழகத்தின் சதிஷ் குமார் 21-17, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா, தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-18, 21-12 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் ஹுவா சூ லி, ஜி மெங் வாங் ஜோடியை வீழ்த்தி, தொடர்ச்சியாக 2வது முறையாக (2023, 2024) சாம்பியன் பட்டம் வென்றது.
பெண்கள் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் அன்மோல் கார்ப், சீனாவின் யான் யான் கெய் மோதினர். இதில் அன்மோல் 21-14, 13-21, 19-21 என போராடி தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.