/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
இரண்டாவது சுற்றில் சிந்து * சிங்கப்பூர் பாட்மின்டனில் வெற்றி
/
இரண்டாவது சுற்றில் சிந்து * சிங்கப்பூர் பாட்மின்டனில் வெற்றி
இரண்டாவது சுற்றில் சிந்து * சிங்கப்பூர் பாட்மின்டனில் வெற்றி
இரண்டாவது சுற்றில் சிந்து * சிங்கப்பூர் பாட்மின்டனில் வெற்றி
ADDED : மே 29, 2024 10:43 PM

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து வெற்றி பெற்றார்.
சிங்கப்பூரில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் உலகின் இந்தியாவின் சிந்து, டென்மார்க்கின் லைன் ஹோஜ்மார்க்கை எதிர்கொண்டார். முதல் செட்டை சிந்து 21-12 என எளிதாக வசப்படுத்தினார். இரண்டாவது செட் இழுபறியாக அமைந்தது. கடைசியில் சிந்து 22-20 என வென்றார்.
முடிவில் சிந்து 21-12, 22-20 என, நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இதில் ரியோ ஒலிம்பிக் (2016) சாம்பியன், ஸ்பெயினின் கரோலினா மரினை சந்திக்கவுள்ளார்.
பிரனாய் வெற்றி
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் பிரனாய், பெல்ஜியத்தின் ஜூலியன் மோதினர். இதில் பிரனாய் 21-9, 18-21, 21-9 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்திய இளம் வீரர் லக்சயா சென், உலகின் 'நம்பர்-1' வீரர் டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சனிடம் 13-21, 21-16, 13-21 என போராடி தோல்வியடைந்தார்.
இந்தியாவின் ஸ்ரீகாந்த், முதல் சுற்றில் ஜப்பானின் நரவோகாவை சந்தித்தார். இதில் ஸ்ரீகாந்த் 21-14, 3-11 என பின் தங்கி இருந்த போது, காயம் காரணமாக விலகினார்.
பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் திரீஷா, காயத்ரி ஜோடி, 21-7, 21-14 என சீன தைபேவின் செங், சன் ஜோடியை வென்றது. இந்தியாவின் அஷ்வினி, தனிஷா ஜோடி, 21-18, 19-21, 19-21 என உக்ரைன் ஜோடியிடம் போராடி தோற்றது.