/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
நான்காவது சுற்றில் தன்வி சர்மா: ஆசிய ஜூனியர் பாட்மின்டனில்
/
நான்காவது சுற்றில் தன்வி சர்மா: ஆசிய ஜூனியர் பாட்மின்டனில்
நான்காவது சுற்றில் தன்வி சர்மா: ஆசிய ஜூனியர் பாட்மின்டனில்
நான்காவது சுற்றில் தன்வி சர்மா: ஆசிய ஜூனியர் பாட்மின்டனில்
ADDED : ஜூலை 24, 2025 11:25 PM

சோலோ: ஆசிய ஜூனியர் பாட்மின்டன் 4வது சுற்றுக்கு இந்தியாவின் தன்வி சர்மா முன்னேறினார்.
இந்தோனேஷியாவில், ஆசிய ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் இந்தியாவின் தன்வி சர்மா, சீனாவின் ஷி சி சென் மோதினர். தன்வி சர்மா 21-19, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு 3வது சுற்றில் இந்தியாவின் வெண்ணாலா 21-12, 22-20 என மலேசியாவின் எங் லி கியூவை வீழ்த்தினார்.
பெண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் வெண்ணாலா, ரெஷிகா ஜோடி 21-7, 21-16 என ஹாங்காங்கின் அயு-யெயுங், யு ஒய் கே ஜோடியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் இந்தியாவின் காயத்ரி, மான்சா ரவாத் ஜோடி 13-21, 18-21 என ஜப்பானின் அன்ரி யமனகா, சோனா யோனேமோடோ ஜோடியிடம் தோல்வியடைந்தது.
கலப்பு இரட்டையர் 2வது சுற்றில் இந்தியாவின் விஷ்ண கேதர், கீர்த்தி ஜோடி 18-21, 19-21 என இந்தோனேஷியாவின் இக்சான் லின்டாங், ரிங்ஜனி ஜோடியிடம் வீழ்ந்தது.

