தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/‘வேர்ல்டு டூர்’: சிந்து தகுதி

‘வேர்ல்டு டூர்’: சிந்து தகுதி

‘வேர்ல்டு டூர்’: சிந்து தகுதி


UPDATED : நவ 05, 2026 12:00 AM

ADDED : நவ 04, 2026 08:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 12:00 AM ADDED : நவ 04, 2026 08:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ‘வேர்ல்டு டூர் பைனல்ஸ்’ பாட்மின்டன் தொடருக்கு இந்திய வீராங்கனை சிந்து தகுதி பெற்றார்.

சீனாவின் ஹாங்சூ நகரில், வரும் டிச. 9–13ல் ‘வேர்ல்டு டூர் பைனல்ஸ்’ பாட்மின்டன் தொடர் நடக்கவுள்ளது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாட, இந்தியாவின் சிந்து 4 ஆண்டுகளுக்கு பின் தகுதி பெற்றார். கடைசியாக 2022ல் தகுதி பெற்றிருந்தார். ஆனால் காயத்தால் விலகினார். ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ள சிந்து, 6வது முறையாக (2018, 2019, 2020, 2021, 2022, 2026) இத்தொடரில் பங்கேற்க உள்ளார். இதில் 2018ல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சிந்து, 2021ல் பைனல் வரை சென்றிருந்தார்.

இந்த ஆண்டு ஜப்பான், ஹைலோ ஓபனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சிந்து 31, பிரெஞ்ச் ஓபனில் பைனல் வரை சென்றார். சமீபத்தில் உலக பாட்மின்டன் கூட்டமைப்பு வெளியிட்ட தரவரிசையில், 4 ஆண்டுகளுக்கு பின் ‘டாப்–6’ பட்டியலில் இடம் பிடித்தார் சிந்து (‘நம்பர்–6’). இதனையடுத்து ‘வேர்ல்டு டூர் பைனல்ஸ்’ தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.

சிந்து கூறுகையில், ‘‘உலக தரவரிசையில் 6வது இடம் பிடித்து, ‘வேர்ல்டு டூர் பைனல்ஸ்’ தொடருக்கு தகுதி பெற்றிருப்பது மகிழ்ச்சி,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us