/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சிராஜை முந்திய ஆகாஷ் தீப்: சச்சின் மனம் கவர்ந்த பந்து
/
சிராஜை முந்திய ஆகாஷ் தீப்: சச்சின் மனம் கவர்ந்த பந்து
சிராஜை முந்திய ஆகாஷ் தீப்: சச்சின் மனம் கவர்ந்த பந்து
சிராஜை முந்திய ஆகாஷ் தீப்: சச்சின் மனம் கவர்ந்த பந்து
ADDED : ஆக 08, 2025 09:52 PM

மும்பை: சிராஜைவிட ஆகாஷ் தீப் வீசிய மந்திர பந்து தான் சச்சினை அதிகம் கவர்ந்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்டில் சிராஜ் மிரட்டினார். இரண்டாவது இன்னிங்சின் துவக்கத்தில் துல்லிய 'யார்க்கரில்' கிராலியை போல்டாக்கினார். இதே போல 5வது நாள் காலையில் கடைசி விக்கெட்டாக அட்கின்சனை போல்டாக்கி, இந்திய அணிக்கு 6 ரன்னில் 'திரில்' வெற்றி தேடித்தந்தார். தொடர் 2-2 என சமன் ஆனது. 5 டெஸ்டில் பங்கேற்ற சிராஜ் 23 வீழ்த்தினார்.
இருப்பினும் தொடரின் சிறந்த பந்தை ஆகாஷ் தீப் வீசியதாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெரிவித்தார். 5 போட்டிகளையும் அலசிய சச்சின் கூறுகையில்,''சிராஜ் சிறப்பாக பந்துவீசினார். பேட்டர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தார். பர்மிங்ஹாமில் நடந்த இரண்டாவது டெஸ்டின் 2வது இன்னிங்சில் ஆகாஷ் தீப் வீசிய பந்தில் அனுபவ ஜோ ரூட் போல்டானதை மறக்க முடியாது. இதை தான் தொடரின் சிறந்த பந்தாக தேர்வு செய்கிறேன். துல்லியமான அளவில் உலகத் தரத்தில் பந்துவீசினார்.
இது தான் போட்டியில் திருப்புமுனை ஏற்படுத்தி, இந்திய வெற்றிக்கு வித்திட்டது,''என்றார்.

