/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஆஷஸ்: வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா
/
ஆஷஸ்: வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா
ADDED : டிச 20, 2025 10:48 PM

அடிலெய்டு: மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்றது. மூன்றாவது டெஸ்ட், அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 371, இங்கிலாந்து 286 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 271/4 ரன் எடுத்திருந்தது.
நான்கம் நாள் ஆட்டத்தில், ஐந்தாவது விக்கெட்டுக்கு 162 ரன் சேர்த்த போது ஜோஷ் டங் 'வேகத்தில்' டிராவிஸ் ஹெட் (170) வெளியேறினார். ஸ்டோக்ஸ் பந்தில் அலெக்ஸ் கேரி (72) அவுட்டானார். ஜோஷ் இங்லிஸ் (10), கேப்டன் பாட் கம்மின்ஸ் (6), லியான் (0), ஸ்காட் போலந்து (1) நிலைக்கவில்லை.
ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 349 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஸ்டார்க் (7) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் ஜோஷ் டங் 4, பிரைடன் கார்ஸ் 3 விக்கெட் கைப்பற்றினர்.
கடின இலக்கு: பின், 435 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு கம்மின்ஸ் தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' பென் டக்கெட் (4), போப் (17) வெளியேறினர். ஜோ ரூட் (39), ஹாரி புரூக் (30) ஆறுதல் தந்தனர். லியான் 'சுழலில்' கேப்டன் ஸ்டோக்ஸ் (5) சிக்கினார். நிதானமாக ஆடிய ஜாக் கிராலே (85) அரைசதம் கடந்தார்.
ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 207/6 ரன் எடுத்து, 228 ரன் பின்தங்கி இருந்தது. ஜேமி ஸ்மித் (2), வில் ஜாக்ஸ் (11) அவுட்டாகாமல் இருந்தனர். கடைசி நாளான இன்று இங்கிலாந்தின் மீதமுள்ள விக்கெட்டுகளை விரைவில் கைப்பற்றினால், ஆஸ்திரேலிய அணி 3-0 என தொடரை கைப்பற்றலாம்.

