
மெல்போர்ன்: ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா, 2-0 என முன்னிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட், அடிலெய்டில் வரும் 17-21ல் நடக்க உள்ளது. அடுத்த இரு போட்டிகள் மெல்போர்ன் (டிச. 26-30), சிட்னியில் (2026, ஜன. 4-8) நடக்க உள்ளது.
இதற்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து, தொடை பின்பகுதி காயம் காரணமாக, வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட் விலகினார்.
இவருக்குப் பதில் ரெகுலர் கேப்டன், வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் 32, அணிக்கு திரும்ப உள்ளார்.
உட் காயம்
இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் மார்க் உட் 35. முதல் டெஸ்டில் 11 ஓவர் பந்து வீசினார். இடது முழங்கால் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்டில் விளையாடவில்லை. தற்போது, ஆஷஸ் தொடரில் இருந்து முழுவதுமாக விலகினார். இவருக்குப் பதில் மாட் பிஷ்சர் அணியில் இணைகிறார்.

