தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/எங்கிட்ட '35' இருக்கு... நீங்களே வச்சுக்கோங்க

எங்கிட்ட '35' இருக்கு... நீங்களே வச்சுக்கோங்க

எங்கிட்ட '35' இருக்கு... நீங்களே வச்சுக்கோங்க


ADDED : மார் 07, 2024 11:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2024 11:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மசாலா: இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா 3-1 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியது. ஐந்தாவது டெஸ்ட் தர்மசாலாவில் (இமாச்சல பிரதேசம்) நடக்கிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 218 ரன்னுக்கு சுருண்டது. சுழலில் அசத்திய குல்தீப் 5 விக்கெட் சாய்த்தார். 100 வது டெஸ்டில் களமிறங்கிய அஷ்வின் 4 விக்கெட் கைப்பற்றினார்.

பொதுவாக 5 விக்கெட் வீழ்த்தியவர்கள், அதன் நினைவாக பந்தை வைத்துக் கொள்வர். நேற்று குல்தீப் 5 விக்கெட் வீழ்த்திய போதும், 100வது டெஸ்டில் விளையாடிய அஷ்வினிடம் பந்தை கொடுத்தார். இதை நான்கு விக்கெட் சாய்த்த அஷ்வின் ஏற்க மறுத்தார். ''என்னிடம் இது போல 35 பந்துகள் உள்ளன. நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்,'' என்று கூறி குல்தீப்பிடம் பந்தை திருப்பிக் கொடுத்தார். இங்கிலாந்து இன்னிங்ஸ் முடிந்ததும் இந்திய அணியை முன்னின்று பெவிலியனுக்கு அழைத்ததுச் செல்லும் பெருமையை குல்தீப்பிற்கு கொடுத்தார். 100 டெஸ்டில் பங்கேற்றுள்ள அஷ்வின், 511 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதில் 35 முறை 5 விக்கெட் சாய்த்துள்ளார்.

100

இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் நேற்று தனது 100 வது டெஸ்டில் களமிறங்கினார்.

* இந்த மைல்கல்லை எட்டிய இந்தியாவின் சீனியர் (37 வயது, 172 நாள்) வீரர் ஆனார். தமிழகத்தின் முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.

* கும்ளே (132), கபில் தேவ் (131), இஷாந்த் (105), ஹர்பஜனுக்கு (103), பின் 100 வது டெஸ்டில் பங்கேற்கும் ஐந்தாவது இந்திய பவுலர் என்ற பெருமை பெற்றார்.

* ஒட்டுமொத்தமாக சச்சின் (200), டிராவிட் (163) உள்ளிட்டோருக்குப் பின் இப்பெருமை பெறும் 14 வது இந்தியர் ஆனார்.

கவுரவம்

அஷ்வின் தனது 100வது டெஸ்டில் நேற்று காலை பீல்டிங் செய்ய களமிறங்கினார். அப்போது இந்திய அணி வீரர்கள் இருபுறமும் அணிவகுத்து நின்று அஷ்வினை நடுவில் வரச்செய்து கவுரவித்தனர். பின் இந்திய அணியை வழிநடத்தி அழைத்துச் சென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us