/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பும்ரா 'நம்பர்-3': ஐ.சி.சி., ரேங்கிங்கில் பின்னடைவு
/
பும்ரா 'நம்பர்-3': ஐ.சி.சி., ரேங்கிங்கில் பின்னடைவு
பும்ரா 'நம்பர்-3': ஐ.சி.சி., ரேங்கிங்கில் பின்னடைவு
பும்ரா 'நம்பர்-3': ஐ.சி.சி., ரேங்கிங்கில் பின்னடைவு
ADDED : அக் 30, 2024 06:46 PM

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பவுலர் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். தென் ஆப்ரிக்காவின் ரபாடா 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார்.
டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா, 846 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். நியூசிலாந்துக்கு எதிரான புனே டெஸ்டில் 'வேகத்தில்' ஏமாற்றிய இவரால் ஒரு விக்கெட் கூட கைப்பற்ற முடியவில்லை.
புனே டெஸ்டில் 5 விக்கெட் வீழ்த்திய இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் (831 புள்ளி) 2வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார். வங்கதேசத்துக்கு எதிரான மிர்பூர் டெஸ்டில் 7 விக்கெட் சாய்த்த தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடா (860 புள்ளி), 4வது இடத்தில் இருந்து 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் (847) 2வது இடத்தை கைப்பற்றினார். மற்றொரு ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் கம்மின்ஸ் (820) 5வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் 'சுழலில்' அசத்திய பாகிஸ்தானின் நோமன் அலி (759), 17வது இடத்தில் இருந்து 'நம்பர்-9' இடத்துக்கு முன்னேறினார்.
ஜெய்ஸ்வால் 'நம்பர்-3': பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ஜெய்ஸ்வால், 790 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருந்து 'நம்பர்-3' இடத்துக்கு முன்னேறினார். மற்ற இந்திய வீரர்களான ரிஷாப் பன்ட் (708), விராத் கோலி (688) முறையே 11, 14வது இடத்துக்கு தள்ளப்பட்டனர்.
'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (434), அஷ்வின் (315) முதலிரண்டு இடங்களில் நீடிக்கின்றனர்.