sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

'காஸ்ட்லி' வீராங்கனை சிம்ரன்: குஜராத் அணியில் ஒப்பந்தம்

/

'காஸ்ட்லி' வீராங்கனை சிம்ரன்: குஜராத் அணியில் ஒப்பந்தம்

'காஸ்ட்லி' வீராங்கனை சிம்ரன்: குஜராத் அணியில் ஒப்பந்தம்

'காஸ்ட்லி' வீராங்கனை சிம்ரன்: குஜராத் அணியில் ஒப்பந்தம்


ADDED : டிச 15, 2024 11:20 PM

Google News

ADDED : டிச 15, 2024 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பிரிமியர் லீக் ஏலத்தில் இந்தியாவின் சிம்ரன், ரூ. 1.90 கோடிக்கு குஜராத் அணியில் ஒப்பந்தமானார்.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் பெண்களுக்கான பிரிமியர் லீக் (டபிள்யு.பி.எல்.,) தொடர் நடத்தப்படுகிறது.

மூன்றாவது சீசன், அடுத்த ஆண்டு பிப். 21-மார்ச் 16ல் நடக்கவுள்ளது. 'நடப்பு சாம்பியன்' பெங்களூரு, மும்பை, டில்லி, குஜராத், உ.பி., என ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான வீராங்கனைகள் 'மினி' ஏலம் பெங்களூருவில் நடந்தது. பெரும்பாலான வீராங்கனைகள் தக்கவைக்கப்பட்டதால், 5 அணிகள் சார்பில் வெறும் 19 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டனர்.

முதலில் வெஸ்ட் இண்டீஸ் 'ஆல்-ரவுண்டர்' டீன்டிரா டாட்டினை ரூ. 1.70 கோடிக்கு குஜராத் அணி வாங்கியது. ரூ. 10 லட்சம் அடிப்படை ஏலத்தொகை கொண்ட மும்பையை சேர்ந்த 'மிடில்-ஆர்டர்' பேட்டர் சிம்ரன் ஷேக்கை 22, ஒப்பந்தம் செய்ய குஜராத், டில்லி அணிகள் மோதின. முடிவில் குஜராத் அணி, ரூ. 1.90 கோடிக்கு தட்டிச் சென்றது. இம்முறை அதிகவிலைக்கு ஒப்பந்தமான வீராங்கனையானார்.

'நடப்பு சாம்பியன்' பெங்களூரு அணி பிரேமா ரவாத்தை ரூ. 1.20 கோடிக்கு வாங்கியது.

இவர்களை தவிர ஸ்ரீ சரணி (டில்லி, ரூ. 55 லட்சம்), அலானா கிங் (உ.பி.,), நாடின் டி கிளார்க் (மும்பை), டேனியல் கிப்சன் (குஜராத்) தலா ரூ. 30 லட்சம், அக் ஷிதா மகேஷ்வரி (மும்பை, ரூ. 20 லட்சம்), நந்தினி காஷ்யப் (டில்லி), ராகவி பிஸ்ட் (பெங்களூரு), கிராந்தி (உ.பி.,), சான்ஸ்கிருதி குப்தா (மும்பை), ஜோஷிதா (பெங்களூரு), ஜாக்ரவி பவார் (பெங்களூரு), பிரகாஷிகா நாயக் (குஜராத்), சாரா பிரைஸ் (டில்லி), நிக்கி பிரசாத் (டில்லி), அருஷி கோயல் (உ.பி.,) தலா ரூ. 10 லட்சத்திற்கு ஒப்பந்தமாகினர்.

கமிலினி கலக்கல்

தமிழக விக்கெட் கீப்பர் கமிலினி 16. அடிப்படை ஏலத்தொகை ரூ. 10 லட்சம் நிர்ணயிக்கப்பட்ட இவரை மும்பை அணி ரூ. 1.60 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. மதுரையை சேர்ந்த கமிலினி, சென்னையில் உள்ள சூப்பர் கிங்ஸ் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டார். கடந்த அக்டோபர் மாதம் நடந்த 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 'டி-20' டிராபியில் 8 போட்டியில், 311 ரன் குவித்தார். நேற்று, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை (19 வயது) லீக் போட்டியில் 29 பந்தில், 44 ரன் (3 சிக்சர், 4 பவுண்டரி) விளாசிய இவர், இந்தியாவின் வெற்றிக்கு கைகொடுத்தார்.



விலை போகாதவர்கள்

நேற்றைய ஏலத்தில் இந்தியாவின் ஸ்னே ராணா, பூணம் யாதவ், சுஷ்மா வர்மா, கோமல்பிரீத் கவுர், ஷிவானி சிங், ஆஸ்திரேலியாவின் கிம் கார்த், டார்சி பிரவுன், லாரா ஹாரிஸ், டெஸ் பிளிண்டாப், இங்கிலாந்தின் ஹீதர் நைட், லாரன் பெல் உள்ளிட்டோரை வாங்க எந்த ஒரு அணியும் முன்வரவில்லை.






      Dinamalar
      Follow us