தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/பேட்டிங் ஆர்டரில் மாற்றமா: நான்காவது போட்டியில் எதிர்பார்ப்பு

பேட்டிங் ஆர்டரில் மாற்றமா: நான்காவது போட்டியில் எதிர்பார்ப்பு

பேட்டிங் ஆர்டரில் மாற்றமா: நான்காவது போட்டியில் எதிர்பார்ப்பு


UPDATED : நவ 12, 2026 12:00 AM

ADDED : நவ 11, 2026 09:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 12:00 AM ADDED : நவ 11, 2026 09:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மவுன்ட் மவுன்கனுய்: ராகுல் விலகியதால், நான்காவது போட்டிக்கான பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு சவாலில் வென்ற இந்தியா, 2–0 என முன்னிலையில் உள்ளது. ஹாமில்டனில் நடக்க இருந்த மூன்றாவது போட்டி, மழையால் ரத்தானது. அடுத்து நடக்க உள்ள நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில், இப்போட்டியுடன் கேப்டன் சுப்மன் கில், விக்கெட் கீப்பர்–பேட்டர் ராகுல், குல்தீப் யாதவ், அன்ஷுல் கம்போஜ், சிராஜ் விலகினர்.

இதனால், மீதமுள்ள இரு போட்டிக்கு (நவ. 13, 15), கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் செயல்பட உள்ளார். எனினும் 2வது போட்டியில், இந்தியாவுக்கு வெற்றி பெற்றுத் தந்த ராகுல் விலகியது, சிக்கலை தந்துள்ளது.

சிறந்த வீரர்



ஏனெனில் பேட்டிங் வரிசையில் எந்த இடத்திலும் களமிறங்குவது, நெருக்கடியான சூழலில், எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளும் திறன், பொறுப்பாக செயல்படுவது, தேவைக்கு ஏற்ப வேகமாக ரன் சேர்ப்பது, நிலைத்து நின்று விளையாடி, வெற்றிகரமாக போட்டியை ‘பினிஷிங்’ செய்வது என அனைத்து விஷயத்திலும் ராகுல் துல்லியமாக செயல்படுவார்.

திடீர் குழப்பம்



தவிர, முதல் இரு போட்டியில் ராகுலை பின் வரிசையில் அனுப்பியதால், அக்சர் 5வது இடத்தில் களமிறங்கினார்.

தற்போது ராகுல் இல்லாத நிலையில் 5, 6, 7 வது இடத்துக்கு சரியான வீரரை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த மூன்று இடத்துக்கு திலக் வர்மா, ருதுராஜ், நமன் திர், அக்சர் படேல் என நான்கு வீரர்கள் போட்டியில் உள்ளனர்.

திலக் எப்படி



இதில் திலக் வர்மா, ‘டி–20’ போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு, திறமை நிரூபித்துள்ளார். 2023ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இக்கட்டான நேரத்தில் களமிறங்கி அரைசதம் அடித்து, அணியை வெற்றிப் பாதைக்கு திருப்ப கைகொடுத்தார்.

இருப்பினும், 50 ஓவர் என்பதால் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார். போட்டியின் ‘மிடில்’ பகுதியில் களமிறங்கும் போது, தொடர்ந்து ரன்களை எடுத்து, ஸ்கோர்போர்டை உயர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். இதை அவரால் செய்ய முடியுமா என்பது சந்தேகம்.

ருதுராஜ் உறுதியா



ருதுராஜை பொறுத்த வரையில் துவக்க வீரராக இருந்தாலும், 4வது இடத்தில் சராசரியாக 71.33 ரன் (5 இன்னிங்சில், மொத்தம் 214) எடுத்துள்ளார். கடந்த 12 மாதங்களில் ஷ்ரேயஸ் ஐயர் இல்லாத நேரங்களில், ருதுராஜ் விளையாடியுள்ளார். தற்போது ஷ்ரேயஸ் கேப்டனாக உள்ளதால், 5வது இடத்தில் ருதுராஜை களமிறக்கலாம்.

அக்சர் நம்பிக்கை



6, 7வது இடத்தில் வரும் வீரர், போட்டியை ‘பினிஷிங்’ செய்து தரவேண்டும். ‘டி–20’ போட்டியில் அசத்திய நமன் திர், 6வது இடத்தில் களமிறக்கும் யோசனை உள்ளது. ஒருநாள் போட்டியில் (6ல் 47 ரன்) போதிய அனுபவம் இல்லை என்றாலும், நிலைத்து நின்று செயல்பட முயற்சிக்கலாம்.

அக்சர் படேலை பொறுத்தவரையில் 7 வது இடத்தில் 346 ரன் (22 இன்னிங்ஸ்) எடுத்துள்ளார். தவிர, சுழற்பந்து வீச்சாளராகவும் கைகொடுக்கிறார். முதல் இரு போட்டியில் 5வது இடத்தில் விளையாடிய இவரை, 6 அல்லது 7 வது இடத்துக்கு மாற்றலாம்.

ரச்சின், கான்வே இடம்


இந்தியாவுக்கு எதிரான இரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. காயத்தில் இருந்து மீண்ட ரச்சின் ரவிந்திரா, கான்வே, பிளண்டல் இடம் பெற்றுள்ளனர். அணி விபரம்:
டாம் லதாம் (கேப்டன்), பிளண்டல், கான்வே, ஜேக்கப் டபி, மாட் ஹென்றி, ஜேமிசன், மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், பிலிப்ஸ், ரச்சின் ரவிந்திரா, சான்ட்னர், நாதன் ஸ்மித், டிக்னர், வில் யங்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us