UPDATED : நவ 12, 2026 12:00 AM
ADDED : நவ 11, 2026 09:26 PM

இந்தியா வரவுள்ள இங்கிலாந்து ‘ஏ’ பெண்கள் அணி, அதிகாரப்பூர்வமற்ற 3 ‘டி–20’ (நவ. 30, டிச. 3, 6), 3 ஒருநாள் (டிச. 8, 11, 14), ஒரே ஒரு நான்கு நாள் போட்டி (டிச. 19–22) கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான இந்தியா ‘ஏ’ பெண்கள் அணி அறிவிக்கப்பட்டது. ‘டி–20’, ஒருநாள் போட்டிக்கு அனுஷ்கா சர்மா, நான்கு நாள் போட்டிக்கு மின்னு மணி கேப்டனாக நியமிக்கப்பட்டனர்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், போட்டியில் பயன்படுத்திய 26 ‘பேட்’களை, மும்பை கிரிக்கெட் சங்கத்தின் (எம்.சி.ஏ.,) சரத் பவார் கிரிக்கெட் மியூசியத்திற்கு வழங்கினார்.
செனகலில், யூத் ஒலிம்பிக் 4வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான குத்துச்சண்டை 50 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில், இந்தியாவின் லாய்ரென்லக்பாம் அம்பேகர் மீதேய் 5–0 என, கொலம்பியாவின் இஸான் ஜெப்ரி காலே அரேவாலோவை வீழ்த்தினார்.
