sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

சென்னை அணி சோகம் தீரல: தொடர்ந்து 5வது தோல்வி

/

சென்னை அணி சோகம் தீரல: தொடர்ந்து 5வது தோல்வி

சென்னை அணி சோகம் தீரல: தொடர்ந்து 5வது தோல்வி

சென்னை அணி சோகம் தீரல: தொடர்ந்து 5வது தோல்வி

10


ADDED : ஏப் 11, 2025 11:50 PM

Google News

ADDED : ஏப் 11, 2025 11:50 PM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பேட்டிங்கில் தேறாத சென்னை அணி, 103 ரன் மட்டும் எடுத்தது. தொடர்ச்சியாக 5வது தோல்வியை சந்தித்தது.

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் சென்னை, 'நடப்பு சாம்பியன்' கோல்கட்டா அணிகள் மோதின.

தோனி கேப்டன்: சென்னை 'லெவன்' அணியில் ருதுராஜ், முகேஷ் சவுத்ரி நீக்கப்பட்டு ராகுல் திரிபாதி, அன்ஷுல் கம்போஜ் தேர்வாகினர். முழங்கை காயத்தால் இத்தொடரில் இருந்து ருதுராஜ் விலகியதால், மீண்டும் கேப்டனாக தோனி களமிறங்கினார். கோல்கட்டா 'லெவன்' அணியில் ஸ்பென்சர் ஜான்சனுக்கு பதிலாக மொயீன் அலி இடம் பெற்றார். 'டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் ரகானே, 'பவுலிங்' தேர்வு செய்தார்.

விக்கெட் சரிவு: சென்னை அணிக்கு ரச்சின் ரவிந்திரா (4), கான்வே (12) ஜோடி ஏமாற்றியது. வருண் சக்ரவர்த்தி வீசிய 6வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய விஜய் சங்கர், மொயீன் அலி பந்தில் ஒரு சிக்சர் விளாசினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 43 ரன் சேர்த்த போது வருண் 'சுழலில்' விஜய் சங்கர் (29) சிக்கினார். திரிபாதி (16) நிலைக்கவில்லை. அடுத்து வந்த அஷ்வின் (1), ரவிந்திர ஜடேஜா (0), தீபக் ஹூடா (0) சொதப்பினர். நரைன் பந்தில் கேப்டன் தோனி (1) அவுட்டாக, மைதானமே அமைதியானது.

துபே ஆறுதல்: நுார் அகமது (1) ஏமாற்றினார். ஹர்ஷித் பந்தில் ஒரு பவுண்டரி அடித்த ஷிவம் துபே, வைபவ் வீசிய கடைசி ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார். சென்னை அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 103 ரன் எடுத்தது. துபே (31), அன்ஷுல் கம்போஜ் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

நரைன் அபாரம்: சுலப இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு குயின்டன் டி காக், சுனில் நரைன் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. அன்ஷுல் கம்போஜ் பந்தில் ஒரு சிக்சர் அடித்த குயின்டன், கலீல் அகமது வீசிய 3வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார். முதல் விக்கெட்டுக்கு 46 ரன் சேர்த்த போது கம்போஜ் பந்தில் குயின்டன் (23) அவுட்டானார். கம்போஜ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய கேப்டன் ரகானே, கலீல் பந்தில் சிக்சர் அடித்தார். கலீல் வீசிய 6வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த நரைன், அஷ்வின் பந்தில் வரிசையாக 2 சிக்சர் பறக்கவிட்டார். நுார் அகமது 'சுழலில்' நரைன் (44) சிக்கினார்.

நுார் அகமது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரிங்கு சிங், ஜடேஜா பந்தை சிக்சருக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார். கோல்கட்டா அணி 10.1 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 107 ரன் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரகானே (20), ரிங்கு (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

தோனி 'அவுட்' சர்ச்சை

சுனில் நரைன் வீசிய 16வது ஓவரின் 3வது பந்தில், சென்னை கேப்டன் தோனிக்கு 'எல்.பி.டபிள்யு.,' முறையில் 'அவுட்' வழங்கப்பட்டது. இதை எதிர்த்து தோனி 'ரிவியூ' கேட்டார். மூன்றாவது அம்பயர் வினோத் சேஷன், பலமுறை 'ரீப்ளே' செய்து பார்த்தார். 'அல்ட்ரா எட்ஜில்' லேசான அதிர்வு இருந்தாலும், பந்து பேட்டில் பட்டது உறுதியாகவில்லை. இதனையடுத்து 3வது அம்பயர் தோனிக்கு 'அவுட்' வழங்கினார். இது, சர்ச்சையை ஏற்படுத்தியது.



நான்காவது வீரர்

நான்காவது ஓவரை வீசிய கோல்கட்டாவின் மொயீன் அலி, ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்கவில்லை. இம்முறை 'மெய்டன்' ஓவர் வீசிய 4வது பவுலரானார் மொயீன். ஏற்கனவே ராஜஸ்தானின் ஜோப்ரா ஆர்ச்சர் (எதிர்: சென்னை), கோல்கட்டாவின் வைபவ் அரோரா (எதிர்: ஐதராபாத்), டில்லியின் முகேஷ் குமார் (எதிர்: பெங்களூரு) இப்படி சாதித்தனர். இவர்கள் நால்வரும் 'விக்கெட் மெய்டனாக' வீசினர்.

இது குறைவு

20 ஓவரில், 103/9 ரன் மட்டும் எடுத்த சென்னை அணி, சேப்பாக்கம் மைதானத்தில் தனது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

* இது, இங்கு பதிவான 2வது குறைந்தபட்ச ஸ்கோரானது. கடந்த 2019ல் இங்கு நடந்த சென்னைக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 70 ரன்னுக்கு சுருண்டது.

* சென்னை அணி, முதலில் 'பேட்' செய்து தனது 2வது குறைந்தபட்ச ஸ்கோரை பெற்றது. கடந்த 2022ல் மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த மும்பைக்கு எதிரான போட்டியில் முதலில் 'பேட்' செய்த சென்னை அணி 97 ரன்னுக்கு சுருண்டது.

முதன்முறைசென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி, முதன்முறையாக தொடர்ச்சியாக 3 போட்டியில் தோல்வியடைந்தது.






      Dinamalar
      Follow us