/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கான்வே, ஆலன் விலகல்: சம்பள ஒப்பந்தத்தில் இருந்து
/
கான்வே, ஆலன் விலகல்: சம்பள ஒப்பந்தத்தில் இருந்து
ADDED : ஆக 15, 2024 10:38 PM

ஆக்லாந்து: நியூசிலாந்து அணியின் சம்பள ஒப்பந்தத்தில் இருந்து கான்வே, ஆலன் விலகினர்.
நியூசிலாந்து வீரர்களுக்கான மத்திய சம்பள ஒப்பந்தப்பட்டியலில் 'டாப்-ஆர்டர்' பேட்டர்களான டேவான் கான்வே, பின் ஆலன் இடம் பிடித்திருந்தனர். இந்நிலையில் தங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவதற்காக இப்பட்டியலில் இருந்து விலகி, சாதாரண வீரராக அணியில் தொடர்வதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து இவர்கள் விரும்பும் தொடர்களில் நியூசிலாந்து அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடுவர். தவிர, உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் 'டி-20' லீக் தொடர்களிலும் எவ்வித சிக்கலும் இல்லாமல் பங்கேற்கலாம்.
சமீபத்தில் டிரன்ட் பவுல்ட், கேன் வில்லியம்சன், பெர்குசன், ஆடம் மில்னே என முன்னணி வீரர்கள் இதுபோல விலகினர்.
இதுகுறித்து கான்வே கூறுகையில், ''எனது முடிவுக்கு சம்மதம் தெரிவித்த நியூசிலாந்து கிரிக்கெட் போர்டுக்கு நன்றி. நியூசிலாந்துக்காக விளையாடுவதை மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன். தொடர்ந்து நியூசிலாந்து கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பேன். தற்போது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது,'' என்றார்.
முன்னணி வீரர்கள் தொடர்ந்து ஒப்பந்தப்பட்டியலில் இருந்து விலகுவது நியூசிலாந்துக்கு பின்னடைவாக அமையலாம்.