/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோலி, ரோகித் ஒப்பந்தம் தொடரும்
/
கோலி, ரோகித் ஒப்பந்தம் தொடரும்
ADDED : மே 14, 2025 10:22 PM

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், சமீபத்தில் புதிய சம்பள ஒப்பந்த பட்டியல் வெளியானது. குறிப்பிட்ட கால இடைவெளியில் 3 டெஸ்ட் அல்லது 8 ஒருநாள் அல்லது 5 சர்வதேச 'டி-20' போட்டியில் விளையாடிய வீரர்கள் இப்பட்டியலில் இடம் பெறுவர்.
'ஏ+ கிரேடில்' இடம் பெற்ற சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவிந்திர ஜடேஜாவுக்கு ரூ. 7 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது. இதனிடையே ரோகித், கோலி என இருவரும் டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றனர். தவிர, 2024 ல் சர்வதேச 'டி-20' அரங்கில் இருந்தும் விடைபெற்றனர்.
ஒருநாள் போட்டிகளில் மட்டும் பங்கேற்க உள்ளனர். இதனால் இவர்களது சம்பள ஒப்பந்தம் ரத்து செய்யப்படுமா என கேள்வி எழுந்தது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் தேவாஜித் சைகியா கூறுகையில்,'' டெஸ்ட், சர்வதேச 'டி-20' ல் இருந்து ஓய்வு பெற்றாலும் ரோகித், கோலியின் சம்பள ஒப்பந்தம் தொடரும். ஏனெனில் அவர்கள், இந்திய கிரிக்கெட்டின் ஒருபகுதியாகத் தான் இன்னும் உள்ளனர். 'ஏ+' கிரேடுக்கு உரிய அனைத்து சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படும்,'' என்றார்.