/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
414 ரன் குவித்தது தமிழகம் * ஆதிஷ், இந்திரஜித், சித்தார்த் சதம்
/
414 ரன் குவித்தது தமிழகம் * ஆதிஷ், இந்திரஜித், சித்தார்த் சதம்
414 ரன் குவித்தது தமிழகம் * ஆதிஷ், இந்திரஜித், சித்தார்த் சதம்
414 ரன் குவித்தது தமிழகம் * ஆதிஷ், இந்திரஜித், சித்தார்த் சதம்
ADDED : ஆக 22, 2025 10:46 PM

சென்னை: தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. மும்பை, பஞ்சாப் உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. தமிழகத்தின் சார்பில் தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் லெவன், தமிழக கிரிக்கெட் சங்க லெவன் என இரு அணிகள் விளையாடுகின்றன.
'ஏ' பிரிவில் தமிழக கிரிக்கெட் சங்க லெவன், ஹரியானா மோதும் போட்டி திருவள்ளூரில் நேற்று துவங்கியது. 'டாஸ்' வென்ற தமிழகம் பேட்டிங் தேர்வு செய்தது. சச்சின் (74), துஷார் (86) ரன் எடுத்தனர். ஆதிஷ் 102 ரன் எடுத்து கைகொடுத்தார். முகமது அலி (30), கேப்டன் ஷாருக் கான் (33) சற்று உதவினர். முதல் நாளில் தமிழக அணி 90 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 414 ரன் குவித்தது. 20 பந்தில் 46 ரன் விளாசிய சோனு அவுட்டாகாமல் இருந்தார்.
திருவள்ளூரில் நேற்று துவங்கிய மற்றொரு போட்டியில் தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் லெவன், மகாராஷ்டிரா அணிகள் மோதுகின்றன. 'டாஸ்' வென்று களமிறங்கிய தமிழக அணிக்கு கேப்டன் பிரதோஷ் (76) நம்பிக்கை தந்தார். ஆன்ட்ரே சித்தார்த் (111), பாபா இந்திரஜித் (104) சதம் அடித்தனர். முதல் நாளில் 90 ஓவரில் தமிழக அணி 384/9 ரன் குவித்தது.
சென்னையில் நடக்கும் போட்டியில் மும்பை, பெங்கால் அணிகள் மோதுகின்றன. முதலில் களமிறங்கிய மும்பை அணிக்கு கேப்டன் ஆயுஷ் மாத்ரே (9) ஏமாற்றினார். சுவேத் (47) உதவ, 70 ஓவரில் 224/7 ரன் எடுத்திருந்தது.