/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்தியா-வங்கதேசம் மோதல் * வெளியானது அட்டவணை
/
இந்தியா-வங்கதேசம் மோதல் * வெளியானது அட்டவணை
ADDED : ஏப் 15, 2025 09:25 PM

புதுடில்லி: இந்தியா கிரிக்கெட் அணி வரும் ஆகஸ்ட் (17-31) மாதம் வங்கதேசம் செல்கிறது. இங்கு மூன்று ஒருநாள், மூன்று 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கான அட்டவணை நேற்று வெளியானது. முதலில் இரண்டு ஒருநாள் போட்டிகள் ஆக. 17, 20ல் மிர்புரில் நடக்கும். மூன்றாவது ஒருநாள் போட்டி ஆக. 23ல் சாட்டோகிராமில் நடக்கும்.
அடுத்து வரும் செப்டம்பரில் நடக்கவுள்ள ஆசிய கோப்பை 'டி-20' தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி மூன்று போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்க உள்ளது.
கடந்த 2014க்குப் பின், வங்கதேச மண்ணில் இந்திய அணி பங்கேற்கும், இருதரப்பு 'டி-20' தொடர் இது. இதன் முதல் போட்டி ஆக. 26ல் சாட்டோகிராமில் நடக்கவுள்ளது. அடுத்த இரு போட்டிகள் ஆக. 29, 31ல் மிர்புரில் நடக்கும்.

