/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சுப்மனுக்கு உதவும் ரோகித், கோலி... * அக்சர் படேல் கணிப்பு
/
சுப்மனுக்கு உதவும் ரோகித், கோலி... * அக்சர் படேல் கணிப்பு
சுப்மனுக்கு உதவும் ரோகித், கோலி... * அக்சர் படேல் கணிப்பு
சுப்மனுக்கு உதவும் ரோகித், கோலி... * அக்சர் படேல் கணிப்பு
ADDED : அக் 17, 2025 10:34 PM

பெர்த்: 'புதிய கேப்டன் சுப்மன் கில் வளர்ச்சிக்கு ரோகித், கோலி உதவியாக இருப்பர்,'' என அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி அக். 19ல் பெர்த்தில் நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, 'சீனியர்' கோலி சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் கூறியது:
இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தவர்கள் ரோகித் சர்மா, கோலி. தற்போது சுப்மன் கில் தலைமையில் விளையாட உள்ளனர். போட்டியின் போது தங்களது கேப்டன் அனுபவத்தை, சுப்மனுடன் பகிர்ந்து கொள்ளலாம். இது கேப்டனாக, அவரது வளர்ச்சிக்கு உதவும்.
ரோகித், கோலி என இருவரும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். நீண்ட நாட்களாக போட்டிகளில் பங்கேற்கவில்லை என்ற போதும், வெற்றிக்காக என்ன செய்ய வேண்டும் என நன்றாகத் தெரியும். இத்தொடருக்காக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் தேவையான பயிற்சியில் ஈடுபட்டனர். போட்டிக்கு தயாராக உள்ளனர்.
எல்லாம் மாறிவிட்டது
கடந்த 2015ல் முதன் முதலாக ஆஸ்திரேலியா வந்தேன். அப்போதெல்லாம் இங்குள்ள சூழ்நிலை, ஆடுகளங்கள், பந்து பவுன்சர் ஆவது குறித்து அதிகம் பேசுவோம். 2015 உலக கோப்பை தொடருக்குப் பின், 'ரெகுலராக' இங்கு விளையாடுகிறோம். எங்களது பேட்டர்கள் சிறப்பாக செயல்படத் துவங்கியுள்ளனர். இப்போது, ஆஸ்திரேலிய சூழல் பற்றி கண்டு கொள்வதில்லை. ஆடுகளம் குறித்து பேசுவதில்லை. எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்தி, போட்டியில் வெற்றி பெறுவது குறித்து தான் யோசிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உலக கோப்பை உறுதியா
இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகார்கர் கூறுகையில்,'' ஆஸ்திரேலிய தொடரில் ரோகித், கோலி சிறப்பாக விளையாட தவறினால், அணியில் இருந்து நீக்கப்படுவர் அல்லது சிறப்பாக செயல்பட்டால், 2027 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறுவர் என இப்போது உறுதியாக கூற முடியாது,'' என்றார்.
இது சரியா
ஆஸ்திரேலிய தொடர் குறித்து, நேற்று அக்சர் படேல், டிராவிஸ் ஹெட் (ஆஸி.,) பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது ஹெட் கூறுகையில்,'' வரும் 2027, உலக கோப்பை தொடரில் ரோகித் 38, கோலி 36, பங்கேற்பர்,'' என்றார். பின் அருகில் இருந்த அக்சரை பார்த்தார். 40 வயதில் இடம் பெற முடியுமா என்பது போல சொன்னார். இதற்கு அக்சர் சிரித்தார். இந்திய அணியின் இரு சீனியர் வீரர்கள் குறித்த கருத்துக்கு அக்சர் சிரித்தது பற்றி விமர்சனம் எழுந்துள்ளது.