/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கேப்டன் ஹர்மன்பிரீத் * இந்திய பெண்கள் அணி அறிவிப்பு
/
கேப்டன் ஹர்மன்பிரீத் * இந்திய பெண்கள் அணி அறிவிப்பு
கேப்டன் ஹர்மன்பிரீத் * இந்திய பெண்கள் அணி அறிவிப்பு
கேப்டன் ஹர்மன்பிரீத் * இந்திய பெண்கள் அணி அறிவிப்பு
ADDED : ஏப் 08, 2025 10:50 PM

புதுடில்லி: இலங்கையில் பெண்களுக்கான முத்தரப்பு ஒருநாள் தொடர் ஏப். 27-மே 11ல் நடக்கவுள்ளது. இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் இதில் பங்கேற்க உள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் 'டாப்-2' இடம் பெறும் அணிகள் பைனலில் (மே 11) பங்கேற்கும்.
அனைத்து போட்டிகளும் கொழும்பு, பிரேமதாசா மைதானத்தில் நடக்கும். ஏப். 27ல் நடக்கவுள்ள முதல் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன.
இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. சமீபத்திய அயர்லாந்து தொடரில் ஓய்வெடுத்த ஹர்மன்பிரீத் கவுர், இந்திய அணி கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டார். ஸ்மிருதி மந்தனா துணைக் கேப்டனாக தேர்வானார். வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா, காயம் காரணமாக சேர்க்கப்படவில்லை.
அணி விபரம்:
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), மந்தனா (துணைக் கேப்டன்), ஹர்லீன் தியோல், ஜெமிமா, ரிச்சா, யஸ்திகா, தீப்தி சர்மா, அமன்ஜோத் கவுர், காஷ்வீ, ஸ்னே ராணா, அருந்ததி, தேஜல், ஸ்ரீ சரனி, சுச்சி.