/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
விமல், பிரதோஷ் கலக்கல் சதம் * தமிழக அணி ரன் குவிப்பு
/
விமல், பிரதோஷ் கலக்கல் சதம் * தமிழக அணி ரன் குவிப்பு
விமல், பிரதோஷ் கலக்கல் சதம் * தமிழக அணி ரன் குவிப்பு
விமல், பிரதோஷ் கலக்கல் சதம் * தமிழக அணி ரன் குவிப்பு
ADDED : அக் 25, 2025 11:06 PM

பெங்களூரு: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழகத்தின் விமல், பிரதோஷ் சதம் விளாசினர்.
இந்தியாவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 91வது சீசன் நடக்கிறது. பெங்களூருவில் நடக்கும் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், நாகலாந்து அணிகள் மோதுகின்றன. 'டாஸ்' வென்ற தமிழகம் பேட்டிங் செய்தது.
தமிழக அணிக்கு ஆதிஷ், விமல் குமார் ஜோடி துவக்கம் தந்தது. ஆதிஷ் 14 ரன்னில் அவுட்டாக, விமல், பிரதோஷ் இணைந்தனர். இருவரும் பவுண்டரி மழை பொழிந்தனர். முதல் தர கிரிக்கெட்டில் முதல் சதம் அடித்தார் விமல். மறுபக்கம் தனது 7வது முதல் தர சதம் அடித்தார் பிரதோஷ்.
2வது விக்கெட்டுக்கு 307 ரன் சேர்த்த போது, விமல் (189) அவுட்டானார். முதல் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 399/2 ரன் குவித்தது. பிரதோஷ் (156), சித்தார்த் (30) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டு 'ஹாட்ரிக்'
அசாமில் நடக்கும் 'சி' பிரிவு போட்டியில் அசாம், சர்வீசஸ் அணிகள் மோதுகின்றன. முதலில் களமிறங்கிய அசாம் 103 ரன்னில் சுருண்டது. சர்வீசஸ் அணியின் மோகித் ஜாங்க்ரா (3), அர்ஜுன் சர்மா (5) என இருவரும் 'ஹாட்ரிக்' விக்கெட் சாய்த்தனர். பின் ரியான் பராக் 5, ராகுல் 4 விக்கெட் சாய்க்க, சர்வீசஸ் அணி 108 ரன்னில் சுருண்டது. அசாம் அணி இரண்டாவது இன்னிங்சில் 56/5 ரன் எடுத்து, 51 ரன் முன்னிலையில் இருந்தது.

