sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

சண்டிகரில் சரிந்தது இந்திய பேட்டிங் * இரண்டாவது போட்டியில் தோல்வி

/

சண்டிகரில் சரிந்தது இந்திய பேட்டிங் * இரண்டாவது போட்டியில் தோல்வி

சண்டிகரில் சரிந்தது இந்திய பேட்டிங் * இரண்டாவது போட்டியில் தோல்வி

சண்டிகரில் சரிந்தது இந்திய பேட்டிங் * இரண்டாவது போட்டியில் தோல்வி


ADDED : டிச 11, 2025 11:25 PM

Google News

ADDED : டிச 11, 2025 11:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முல்லன்புர்: இரண்டாவது 'டி-20' போட்டியில், பேட்டர்கள் கைவிட, இந்திய அணி 51 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவிடம் தோல்வியடைந்தது. திலக் வர்மா போராட்டம் வீணானது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி நேற்று பஞ்சாப் மாநிலம், முல்லன்புரில் (புதிய சண்டிகர்) உள்ள மஹாராஜா யாதவிந்த்ரா சிங் மைதானத்தில், முதன் முறையாக நடந்தது.

'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார், பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. தென் ஆப்ரிக்க அணியில் ஸ்டப்ஸ், நோர்க்கியா, மஹாராஜ் நீக்கப்பட்டு, ஹென்ரிக்ஸ், பார்ட்மென், ஜார்ஜ் லிண்டே சேர்க்கப்பட்டனர்.

ஏமாற்றிய பவுலிங்

தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் டி காக், ரீஜா ஹென்ரிக்ஸ் ஜோடி துவக்கம் கொடுத்தது. அர்ஷ்தீப் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தை சிக்சருக்கு விரட்டினார் குயின்டன். மீண்டும் வந்த அர்ஷ்தீப் ஓவரில் (3), தலா ஒரு பவுண்டரி, சிக்சர் என அடித்த குயின்டன் வேகமாக ரன் சேர்த்தார். பும்ரா வீசிய 4வது ஓவரில் ஹென்ரிக்ஸ், குயின்டன் என இருவரும் தலா ஒரு சிக்சர் அடிக்க, மொத்தம் 16 ரன் கிடைத்தன.

5வது ஓவரை வருண் சக்ரவர்த்தி வீசினார். இவரது முதல் பந்தில் ஹென்ரிக்ஸ் (8) போல்டானார். பின் வந்த கேப்டன் மார்க்ரம், அக்சர் ஓவரில் (6) பவுண்டரி அடித்தார். தன் பங்கிற்கு ஒரு சிக்சர் அடித்த குயின்டன், ஹர்திக் பாண்ட்யா, வருண் பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்பினார். இவர் 26 பந்தில் அரைசதம் கடந்தார். சர்வதேச 'டி-20'ல் இது இவரது 17 அரைசதம் ஆனது. தொடர்ந்து மிரட்டிய குயின்டன், அக்சர், அர்ஷ்தீப் பந்துகளை சிக்சருக்கு விரட்டினார்.

வருண் 'இரண்டு'

போட்டியின் 12 வது ஓவரை வீசினார் வருண். இதன் 2, 3வது பந்தில் மார்க்ரம் (29), சிக்சர் அடித்தார். கடைசி பந்தில் அக்சரிடம் 'கேட்ச்' கொடுத்து திரும்பினார். பிரவிஸ், வந்த வேகத்தில் வழக்கம் போல, ஒரு பவுண்டரி அடிக்க, தென் ஆப்ரிக்க அணி 13 ஓவரில் 130/2 ரன் குவித்தது.

தனது விளாசலை நிறுத்தாத குயின்டன், பாண்ட்யா வீசிய 14வது ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் என விளாச, 17 ரன் எடுக்கப்பட்டன. 46 பந்தில் 90 ரன் குவித்த குயின்டன், வருண் (15.1 வது ஓவர்) பந்தை எதிர்கொண்டார். பந்து குயின்டன் பேட்டில் பட்டுச் சென்றது. இதை அப்படியே இடது கையால் பிடித்த விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா, துல்லியமாக ரன் அவுட் செய்து அசத்தினார்.

அடுத்த சில நிமிடத்தில் அக்சர் சுழலில், அபாய பிரவிஸ் (14) சிக்கினார். அர்ஷ்தீப் வீசிய 19 வது ஓவரின் முதல் பந்தில் பெரேரா, 4வது பந்தில் மில்லர் என இருவரும் தலா ஒரு சிக்சர் அடித்தனர். பும்ரா வீசிய கடைசி ஓவரில் 2 சிக்சர் உட்பட 18 ரன் எடுக்கப்பட்டன.

தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 213/4 ரன் குவித்தது. மில்லர் (20), பெரேரா (30) அவுட்டாகாமல் இருந்தனர்.

சுப்மன் 'டக்'

இந்திய அணிக்கு சுப்மன் கில், அபிஷேக் ஜோடி துவக்கம் தந்தது. நிகிடி வீசிய முதல் ஓவரில், ஒரே பந்தில் சுப்மன் 'டக்' அவுட்டானார். 3வது இடத்தில் இம்முறை அக்சர் படேல் களமிறங்கினார். மறுபக்கம் 2 சிக்சர் அடித்த அபிஷேக் (17) நிலைக்கவில்லை. சூர்யகுமார் (5) மறுபடியும் ஏமாற்ற, இந்திய அணி (32/3) மோசமான நிலைக்கு சென்றது.

திலக் அரைசதம்

அடுத்து அக்சர் படேல், திலக் வர்மா இணைந்தனர். சிபம்லா வீசிய 5வது ஓவரின் 4, 5வது பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு அனுப்பினார் திலக் வர்மா. பெரேரா ஓவரில் (7) அக்சர் ஒரு சிக்சர், திலக் வர்மா ஒரு பவுண்டரி அடித்தனர். இந்நிலையில் 21 பந்தில் 21 ரன் எடுத்து அக்சர் அவுட்டாக, இந்திய அணி 10 ஓவரில், 81/4 ரன் என தள்ளாடியது.

12.1 ஓவரில் இந்தியா 100 ரன்களை எட்டியது. நிகிடி பந்தில் சிக்சர் அடித்த திலக் வர்மா, 27 பந்தில் அரைசதம் எட்டினார். பாண்ட்யா 20 ரன் எடுத்தார். தென் ஆப்ரிக்க பவுலர்களும் கட்டுக்கோப்பாக பந்து வீச, இந்திய வெற்றிக்கு கடைசி 24 பந்தில் 78 ரன் தேவைப்பட்டன. ஜிதேஷ் சர்மா 17 பந்தில் 27 ரன் எடுத்து அவுட்டானார். பார்ட்மென் வீசிய 19 வது ஓவரில் ஷிவம் துபே (1), அர்ஷ்தீப் (4), வருண் (0) அவுட்டாகினர். கடைசியில் திலக் வர்மா (62) அவுட்டாக, இந்திய அணி 19.1 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. தொடர் 1-1 என சமனில் உள்ளது. மூன்றாவது போட்டி டிச. 14ல் தர்மசாலாவில் நடக்க உள்ளது.

5 ரன், 5 விக்கெட்

இந்திய அணி நேற்று 17.4 ஓவரில் 157/5 ரன் என இருந்தது. அடுத்த 5 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுக்க, 19.1 ஓவரில் 162 ரன்னில் சுருண்டது.

சொந்தமண்ணில்...

இந்திய அணியில் நேற்று துணைக் கேப்டன் சுப்மன் கில், அபிஷேக் சர்மா, அர்ஷ்தீப் சிங் என மூன்று பஞ்சாப் வீரர்கள், தங்களது சொந்தமண்ணில் விளையாடினர்.

7 பந்தில், 3 'அவுட்'

சர்வதேச 'டி-20'ல் வருண் சக்ரவத்தியின் சுழலில் தடுமாறுகிறார் ஹென்ரிக்ஸ். இவரது 7 பந்தை எதிர்கொண்ட இவர், மொத்தம் 3 முறை அவுட்டாகினார்.

மூன்றாவது வீரர்

இந்திய அணிக்கு எதிரான 'டி-20' அரங்கில் அதிக அரைசதம் அடித்த வீரர்களில் முதலிடத்தை வெஸ்ட் இண்டீசின் நிக்கோலஸ் பூரன், இங்கிலாந்தின் பட்லருடன் பகிர்ந்து கொண்டார் குயின்டன். மூவரும் தலா 5 அரைசதம் அடித்தனர்.

16 'வைடு'

புதிய சண்டிகர் மைதானத்தில் பனிப்பொழிவு அதிகம் இருந்தது. இதனால், முதலில் பந்து வீசிய போதும், இந்திய பவுலர்கள் 'கிரிப்' கிடைக்காமல் மொத்தம் 16 'வைடு' வீசினர். பாண்ட்யா (3), பும்ரா (2), அக்சர் (1), துபே (1) இணைந்து 7 'வைடு' வீசினர். 11 வது ஓவரில் மட்டும் 7 உட்பட மொத்தம் 9 வைடு வீசி அதிர்ச்சி தந்தார் அர்ஷ்தீப்.

13 பந்து

சர்வதேச 'டி-20'ல் ஒரு ஓவரில் அதிக பந்து வீசிய பவுலர்களில் முதலிடத்தை நவீன் உல் ஹக்குடன் (ஆப்கன்) பகிர்ந்து கொண்டார் அர்ஷ்தீப். இருவரும் தலா 13 முறை பந்து வீசினர். 2வது இடத்தில் சிசாண்டா (12 முறை, தெ.ஆப்.,.) உள்ளார்.

54 ரன்

அர்ஷ்தீப் (4 ஓவர், 54 ரன்) நேற்று தனது இரண்டாவது மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார். முன்னதாக 2022ல் கவுகாத்தி போட்டியில் 62 ரன் விட்டுக் கொடுத்தது (எதிர்-தெ.ஆப்.,) முதலிடத்தில் உள்ளது.






      Dinamalar
      Follow us