UPDATED : ஜூலை 05, 2026 12:31 AM
ADDED : ஜூலை 04, 2026 07:03 PM

மான்செஸ்டர்: இந்திய அணியில் அறிமுகமான இளம் வீரர் என வரலாறு படைத்தார் வைபவ் சூர்யவன்ஷி.
இந்தியா-இங்கிலாந்து மோதிய இரண்டாவது 'டி-20' போட்டி மான்செஸ்டரின், ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடந்தது. இந்திய 'லெவன்' அணியில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு, 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி அறிமுக வாய்ப்பு பெற்றார். ஹர்பஜன், ரெய்னா அணிந்து விளையாடிய '03' என்ற எண் பொறிக்கப்பட்ட 'ஜெர்சி' அணிந்து விளையாடுகிறார்.
இதையடுத்து இளம் வயதில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆன 'ஜாம்பவான்' சச்சின், 37 ஆண்டு கால சாதனையை தகர்த்தார். சச்சின், 1989ல் 16 வயது 205 நாளில் (எதிர், பாக்., கராச்சி டெஸ்ட்) அறிமுகமானார். வைபவ் சூர்யவன்ஷி 15 வயது, 99 வது நாளில் அறிமுகம் ஆனார்.
முதல் வீரர்
ஐ.சி.சி., டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகள் சார்பில், சர்வதேச 'டி-20'ல் அறிமுகம் ஆன இளம் வீரர் என சாதனை படைத்தார் வைபவ் (15 வயது, 99 நாள்). அயர்லாந்தின் லிட்டில் (16 வயது, 309 நாள்) அடுத்து உள்ளார்.
* ஒட்டுமொத்த 'டி-20'ல் அறிமுகம் ஆன 11வது இளம் வீரர் ஆனார். இதில் ருமேனியாவின் கெராசிம் (14 வயது, 16 நாள்) முதலிடத்தில் உள்ளார்.
சச்சினை முந்தினார்
இந்திய அணியில் அறிமுகமான இளம் வீரர் என சாதனை படைத்தார் வைபவ் சூர்யவன்ஷி (15 ஆண்டு, 99 நாள்). இதன் மூலம் 'ஜாம்பவான்' சச்சினின், 37 ஆண்டு கால சாதனையை முறியடித்தார். சச்சின், 1989ல் 16 வயது 205 நாளில் (எதிர், பாக்., கராச்சி டெஸ்ட்) அறிமுகமானார். 'டி-20' அரங்கில் இந்தியா சார்பில் இளம் வயதில் அறிமுகான வாஷிங்டன் சுந்தர் (18 ஆண்டு, 80 நாள், எதிர், இலங்கை, 2017) சாதனையையும் தகர்த்தார்.
* சர்வதேச அளவில் (ஐ.சி.சி., உறுப்பு நாடுகள்) இளம் வயதில் அறிமுகமான வீரர்கள் பட்டியலில் வைபவ் இரண்டாவது இடம் பெற்றார். முதலிடத்தில் ஹசன் ராசா (பாக்., 14 ஆண்டு, 227 நாள், எதிர், ஜிம்பாப்வே, 1996, பைசலாபாத்) உள்ளார்.
* ஐ.சி.சி., டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகள் சார்பில், சர்வதேச 'டி-20' போட்டியில் அறிமுகம் ஆன இளம் வீரர் என சாதனை படைத்தார் வைபவ். அடுத்து, அயர்லாந்தின் லிட்டில் (16 வயது, 309 நாள்) உள்ளார்.
* ஒட்டுமொத்த 'டி-20' போட்டியில் அறிமுகம் ஆன 11வது இளம் வீரர் ஆனார் வைபவ். இதில் ருமேனியாவின் கெராசிம் (14 வயது, 16 நாள்) முதலிடத்தில் உள்ளார்.
* அறிமுக கராச்சி டெஸ்டில் சச்சின், 15 ரன்னுக்கு (24 பந்து, 2x4), வக்கார் யூனிஸ் பந்தில் போல்டானார். நேற்று பைவப், 10 பந்தில் 14 ரன் எடுத்தார். அறிமுக 'டி-20' போட்டியில் 'ஸ்டம்பிங்' முறையில் அவுட்டான முதல் இந்திய வீரரானார் வைபவ்.
