/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோப்பை வென்றது நியூசிலாந்து * வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் தோல்வி
/
கோப்பை வென்றது நியூசிலாந்து * வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் தோல்வி
கோப்பை வென்றது நியூசிலாந்து * வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் தோல்வி
கோப்பை வென்றது நியூசிலாந்து * வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் தோல்வி
ADDED : நவ 13, 2025 10:48 PM

டுனிடின்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது 'டி-20' போட்டியில், நியூசிலாந்து அணி 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து சென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டி முடிவில் நியூசிலாந்து 2-1 என முன்னிலையில் இருந்தது. ஐந்தாவது, கடைசி போட்டி டுனிடினில் நடந்தது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து பீல்டிங் தேர்வு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஷாய் ஹோப் (11), அதனாசே (1) ஜோடி துவக்கம் தந்தது. அக்கீம் (8), ரூதர்போர்டு (0) ஏமாற்ற, ராஸ்டன் சேஸ் அதிகபட்சம் 38 ரன் எடுத்தார். பின் வரிசையில் ஹோல்டர் (20), ஷெப்பர்டு (36) சற்று உதவ, வெஸ்ட் இண்டீஸ் அணி 18.4 ஓவரில் 140 ரன்னில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்தின் ஜேக்கப் டபி 4 விக்கெட் சாய்த்தார்.
எளிய வெற்றி
நியூசிலாந்து அணிக்கு கான்வே, டிம் ராபின்சன் (45) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ரச்சின் 21 ரன் எடுத்தார். அடுத்து கான்வே (47), சாப்மென் (21) அவுட்டாகாமல், அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். நியூசிலாந்து அணி 15.4 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 141 ரன் எடுத்து வெற்றி பெற்றது. 3-1 என தொடரை கைப்பற்றி, கோப்பை வென்றது.

