/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இளம் இந்தியா ஏமாற்றம் * பாக்., அணியிடம் தோல்வி
/
இளம் இந்தியா ஏமாற்றம் * பாக்., அணியிடம் தோல்வி
ADDED : நவ 30, 2024 10:37 PM

துபாய்: யூத் ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 43 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் யூத் அணிகளுக்கான (19 வயது) ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டி நடக்கின்றன. நேற்று நடந்த 'ஏ' பிரிவு போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் மோதின. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
ஷாஜெய்ப் சதம்
பாகிஸ்தான் அணிக்கு உஸ்மான் கான், ஷாஜெய்ப் கான் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 160 ரன் சேர்த்த போது உஸ்மான் (60) அவுட்டானார். ரியாஜுல்லா 27 ரன் எடுத்தார். ஷாஜெய்ப் சதம் விளாசினார். இவர் 147 பந்தில் 159 ரன் (10x6, 5x4) எடுத்து அவுட்டானார். 19 வயது கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வீரர் எடுத்த அதிக ரன் ஆனது. பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 281/7 ரன் எடுத்தது. இந்தியாவின் சமர்த் 3, ஆயுஸ் 2 விக்கெட் சாய்த்தனர்.
நிகில் ஆறுதல்
பின் களமிறங்கிய இந்திய அணியை ஆயுஸ் (20), சித்தார்த் (15), கேப்டன் முகமது அமான் (16), கிரண் (20), ஹர்னவ்ஸ் (26) ஏமாற்றினர். சமீபத்திய ஐ.பி.எல்., ஏலத்தில் ரூ. 1.1 கோடிக்கு வாங்கப்பட்ட 13 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 1 ரன் எடுத்தார். நிகில் 67 ரன் எடுத்து ஆறுதல் தந்தார். முகமது எனான் (30) போராடிய போதும் வெற்றிக்கு போதவில்லை. இந்திய அணி 47.1 ஓவரில் 238 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.